பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சங்க இலக்கியம்

நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்தான் -கம்பர்

என்று கம்பர் தமிழைப் பற்றிக் கூறுகின்றார். பாரதியும்,

ஆதிசிவன் பெற்றான்

அகத்தியன் எனை வளர்த்தான்

என்று தமிழ்த்தாய் கூற்றாகக் கூறுகின்றார். இவ் வண்ணம் தமிழ்மொழியின் பிறப்பினை அநாதியான இறைவனுடன் தொடர்புபடுத்திக் கூறுவது எல்லாம் மொழியின் மிகத் தொன்மையான தன்மையைக் குறிப்பதற்கே யாம். ஆயின் இவ்வாறு வருகின்ற இலக்கியப் பகுதிகளை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ் மிகத் தொன்மையானதொரு மொழி என்று நிறுவிவிடல் இயலாது. எனவே பொருளொடு கூடிய, உண்மையொடு, தொடர்புடைய, வரலாற்றோடு பிணைப் புள்ள, பல்லறிஞர்களும் ஏற்றுக்கொள்ளுகின்ற சான்றுகளைக் காணல்வேண்டும்.

1) தமிழ் செந்தமிழ் கொடுந்தமிழ் என இரு பிரிவு களாகப் பிரிக்கப்படுகின்றது. செந்தமிழ் என்பது செம்மைப்பட்ட அல்லது திருத்தமுற்ற தமிழாம். தமிழின் மிகப் பழமையான வடிவங்களை அழியாமற் பாதுகாத்து வருவது. செந்தமிழ் வடமொழிச் சொற்கள் கலப்புற்ற துாய்மையை உடையது. கொடுந்தமிழ் என்பது பேச்சுத் தமிழாம். செந்தமிழினின்றும் கொடுந்தமிழ் பல்லாற்றா னும் வேறுபடுகின்றது. பதிற்றுப்பத்து போன்ற சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் நாம் காணும் செந்தமிழ் நடை தற்காலத் தமிழனுக்கு விளங்காத நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரத்தே இடை யிடையே நாம் காணும் உரையையும், இறையனார் அகப்பொருள் உரையையும் குறிப்பிடலாம். செந்தமிழின் தூய்மையைநோக்குழி அது இன்றைய மக்கட்கு விளங் காதகடுமையை நோக்குழி, செந்தமிழ் பேச்சுத் தமிழினின்றும் வேறுபட்ட ஒரு தனிமொழியோ என்று