பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 33

கூறத் தோன்றுகிறது. தமிழ் என்ற ஒரு மொழியின் இரு நிலைகளா இவை என்று ஐயுறத் தோன்றுகிறது. செந்தமிழிற்கும் பேச்சுத்தமிழிற்கும் உள்ள இத்தகைய வேறுபாடு தமிழின் தொன்மைக்கு ஒரு சான்றாகும். அதாவது செந்தமிழினின்றும் இத்துணை வேறுபாடு கொண்ட பேச்சுத் தமிழ் தோன்றுவதற்கு எத்துணைக் காலம் ஆகியிருத்தல் வேண்டும் என்பது!

2) தமிழின் சொற்பெருக்கத்தைச் சொல்லில் வடிக்க இயலாது. தமிழில் ஒரு பொருட் பன்மொழி உண்டு. மலை என்ற ஒன்றைக் குறிக்க ஓங்கல், வெற்பு, அடுக்கம், பொருப்பு, வரை என்று பல சொற்கள் உள. மேலும் ஒவ்வொரு கருத்தையும் குறிக்கத் தமிழில் பெரும்பாலும் பிறமொழிகளில் காணப்படாத சிறப்புச் சொற்கள் இருப்பதோடு அப் பிறமொழிகள் ஒவ்வொன் றிற்கும் சிறப்பான அதே கருத்துடைய சொற்களும் உள்ளன. வீடு’ என்பது தமிழுக்கே உரிய சிறப்பான சொல். தெலுங்கில் உள்ள இல்லு என்ற சொல்லுக்கு நிகரான “இல்” என்ற சொல்லும் கன்னடத்தே மனே’ என்ற சொல்லுக்கு நிகரான மனை’ என்ற சொல்லும், வடமொழியில் அமைந்த குடி என்ற சொல்லுக்கு இணையாகக் குடி’ என்ற சொல்லும் தமிழில் உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு திராவிட மொழியிலும் உள்ள சொற்களின் பழந்திராவிட வடிவங்களும் வேர்ச்சொற் களும் தமிழில் இருப்பதால் இதனைப் பழைய வேர்ச்சொற்களும் வடிவங்களும் உள்ள ஒரு களஞ்சியம் எனலாம். இச் செய்திகளை நோக்கத் தமிழ்மொழி இலக்கிய மொழியாகத் திருத்த முற்றது மற்ற திராவிட மொழிகள் இலக்கிய மொழிகளாதற்கு நெடுங்காலம் முன்னரே என்பது வெள்ளிடை மலையாகிறது.

3) தமிழ் தொல் இலக்கணச் சொல் வடிவங்கள், இறந்துபட்ட பொருள் நிறை சொற்கள், பழங்கால