பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம்

வாடு என்பேத (வாடு-அவன்) உயிரிடம் பெயரல் (Euphonic Displacement of Vowels) aréârp 52.65uouse விதிப்படி முதலில் உள்ள சுட்டு அகரம் இரண்டாவதாக உயிரைத் தன் இனம் ஆக்கிய பின்தானிறந்து விடுகின் றது. இறந்துபட்ட உயிரின் மாத்திரை பின் உயிருடன் கூட்டப்பட்டு அது நீள்கின்றது.

அ--வ் + அ +டு - வ்-ஆடு- வாடு

FF

இவ்வண்ணம் அவன் என்ற சொல் வாடு என்றும் இவன் என்ற சொல் வீடு என்றும் மாற்றம் அடைவதற்கு எத்துணை காலம் ஆகியிருத்தல் வேண்டும்.

6) வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் இரு முறைப்படி புகுகின்றன. 1. தற்சமம், 2. தற்பவம். தற்சமம் என்பது வடமொழியில் உள்ள சொற்கள் அப்படியே தமிழில் ஆளப்படுதல். எ.கா. குங்குமம்.

தற்பவம் என்பது வடமொழிச்சொற்கள் தமிழில் சிதைந்து திரிபுற்று வழங்கப்படுதல். அதாவது தமிழ் இலக்கண விதிகட்கு ஏற்ப அச்சொற்கள் மாறி அமைந் திருக்கும். எ.கா. பங்கஜம் - பங்கயம்

தமிழில் தற்பவமான சொற்கள் மிகுதியும் காணப் படுகின்றன, அச் சொற்கள் பிற மொழிகளில் உள்ள வட மொழித் திரிபுகளைவிட எவ்வளவோ சிதைந்திருப்பதை நோக்குங்கால் அவ் வழக்குகள் மிகப் பழமையானவை என்பது தெளிவாகின்றது.

அ) பூரீ - பழந்தமிழில் திரு. பிற்காலத் தமிழில் சிரி .

சிறீ - சீ என்றாயது.