பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சங்க இலக்கியம்

பண்பாட்டைப் பழம் இலக்கியங்களும், கல்வெட்டுக் களும் நமக்குத் தெளிவாக்குகின்றன.

13) இராமாயணத்திற்கு முற்பட்டது மகாபாரதம். மகாபாரதத்திற்கு முற்பட்ட காலத்தைத் திரிபுராதிகள் காலம் என்பர். அதற்கு முற்பட்டது தமிழ் என்று தமிழின் தொன்மையைக் கு றி ப் பி டு கி ன் ற ா ர் திரு. து. அ. சிதம்பரநாதன் அவர்கள்.

14) ஆரியத்திற்கு முற்பட்டது தமிழ் என்று தமது ஆய்வுக் கட்டுரையில் கூறுகின்றார் திரு. வீரபாகுப் பிள்ளை.

15) பழந்தமிழரே முதன்முதலில் தோன்றிய மக்கள் என்றும் பழந்தமிழே முதலில் பேசப்பட்ட மொழி என்றும் உலகில் ஆங்கிலேயர் முதலான ஐரோப் பியரும், மற்ற இனத்தவர்களும் பழந்தமிழரின் வழித் தோன்றியவர்களே எ ன் று ம் மொகஞ்சதரோவில் வளர்ந்த பழந்தமிழ் நாகரிகமே மத்தியத் தரைக்கடலை அடுத்த பகுதிகளில் எகிப்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், போனிசிய நாகரிகம் கிரேக்க நாகரிகம் வளரக் காரணமாக இருந்தது என்றும் கருத இடம் உள்ளது, என்று வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் Pre historic South India arorso gong, soráð6 குறிப்பிட்டுள்ளார்.

16) திராவிடம் என்ற சொல் தமிழைக் குறித்து நின்றது. இதன் வரலாற்றை நேசக்கும்போது தமிழின் தொன்மையும் சிறப்பும் நன்கு விளங்கும்.

அ) வடமொழியில் வால்மீகி இராமாயணத்திலும், மனுநூலிலும், பா ர த த் தி லும், பாகவதத்திலும் ‘திராவிடர்” என்ற சொல் வழக்கு உள்ளது.

ஆ) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் குமாரிலபட்டர் என்பர் ஆந்திர திராவிடர் பாஷைகள் என்ற தொடரை