பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கி யம்

ஏ) தமுளியா என்ற திரிபை டச்சுப் பாதிரிமார்களும் (Lingua Damulia) & ufiflf (Damirici) sr&jr p $fj 5 வடிவத்தை ரோமர்களும் தெஹிமோலே (Tehi.mole) என்ற திரிபைச் சீனர்களும் வழங்கியது போலவே தமிழொலி பயிலாத ஆரியர் தமிழ் என்பதையே தமிளோ, த்ரமிளோ, திரமிளம் திரவிடம், திராவிடம் எனத் திரித்து வழங்கினர் எனக் கொள்வதே பொருந்தும் 5T of வி ஆர். ஆர். தீட்சிதர் குறிப்பிடுகின்றார்.

17. தமிழ் என்ற சொல் பழங்காலம் முதல் தமிழிலக் கியத்தில் பயின்று வழங்கியிருத்தலையும், திரமிளம், திராவிடம் என்ற சொற்கள் வடநூல்களில் ஒரோ வழி ஆங்காங்கே வழங்குதலையும் இங்குக் கருதல் வேண்டும்.

18. இவ்வாறு பல்லாற்றானும் சிறப்புற்றிலங்கும் தமிழ் மொழியின் சிறப்பினை,

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்

-வில்லிபாரதம்

ஓங்கலிடை வந்து உயர்ந்தேனர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருள் கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதி ரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்

-(தண்டி. உரை-மேற்கோள்)

1. To return to the term Dravida, it must be a corruption of the word Tamil, ..so the Dravidian must ligitimately refer to the growth and development of the Tamil language. But the word has been extended by the Modern scholars to all the allied languages and even as the generic name for all South Indian people.

—V вв. Dikshitar, Pre-historic South India, p. 230