பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 43

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்ட மிதில் தக்க சிறு பிறைநுதலும் தனித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடருற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்ம ணக்க இருந்தபெருந் தமிழணங்கே

-மனோன்மணியம்

இவ்வாறு பல நூல்கள் போற்றுகின்றன.

19. சென்ற நூற்றாண்டில் சமயத்தொண்டு காரண மாக இந்நாட்டிற்கு வந்த ஐரோப்பியர் தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து போற்றியது தமிழின் பெருமையை உயர்த்துவதாக அமைந்தது. ஆங்கிலம் கற்ற தமிழர் பலரைத் தட்டியெழுப்புவதற்கு அது காரணம் ஆயிற்று. தமிழரிடையே மீண்டும் மொழிப்பற்று வளர்வதற்கும் அது உதவியது.

அ) ஜி. யு. போப் என்றும் தன் வாழ்வைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்றார்.

ஆ) ஆந்திர இலக்கியத்திலும் அரசியற் கலை களிலும் வல்லுநராய் ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் விளங்கிய அறிஞர் சி. ஆர். ரெட்டி தமிழ்மொழியைத் திராவிடர்களின் சமயப் பெருமொழி எனப்போற்றுகின்றார்”.

_

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS __ - _.

1. “Tamil the holy language of the Dravidians” – C. R. Reddy, Foreword to the Ancient Dravidians by J. R. Sesha Iyangar p. xvii.