பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சங்க இலக்கியம்

இலக்கியச் செல்வங்கள் பலவற்றைப் பெற்றிருக்கும் தமிழின்மேல் ஆந்திரராகிய தாம் பொறாமை கொள்வ தாகக்கூறுகின்றார் சி. ஆர். ரெட்டி’.

மிகமிகப் பண்பட்ட மொழி என்றும், தனக்கே உரிய தாக இயல்பாக வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வம் உடையமொழி என்றும் ‘மாக்ஸ்முல்லர் தமிழைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்”.

ஆற்றல் மிக்கதாகவும் சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ் மொழியை எந்த மொழியும் விஞ்சமுடியாது என்றும், உள்ளத்தின் வெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறு எந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை என்றும் பெரிசிவில் என்னும் அறிஞர் எடுத்துரைத்துள்ளார்.

முடிவுரை : இவற்றையெல்லாம் நோக்கும்போது தமிழன் தொன்மையும், சிறப்பும் பிறநாட்டார் தமிழைப் போற்றும் திறனும், தமிழின் பெருமையும், அருமையும் இனிமையும் தெளிவாகின்றதன்றோ!

- - - -

1. As an Andra I envy Tamil its Possession of two such poems as Silappathikaram and Manimekalai for which I can find no equivalents in Telugu literature. Even in translation they dominate the soul - like charm. what must be like in the original.

— lbid, p. х.х.

2. Tamil is the most highly cultivated language and possessed the richest sores of indigenous literature.

–Max Muller

3. No language combines greater force with equal brevity than Tamil and it may be asserted that no human speech is more close and philosophic in its expression as an exponent of the mind than the same.

-Rev. Percival,