பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சங்க இலக்கியம்

என்ற பகுதியைக் காட்டுவர். இதில் குறிப்பிட்டுள்ள பேரிருட் பக்கம், கிருட்டின பக்கம் (பெளர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம்) அழல் சேர் குட்டம் - கார்த்திகைப் பரணி என்ற உரைக் குறிப்புகளையும் தம் வானநூல் அறிவை யும் பயன்படுத்தி, கண்ணகி மதுரையை எரியூட்டியது கி. பி. 765ஆம் ஆண்டு ஜீலைத் திங்கள் 28 ஆம் நாள் என்றும் அதனால் கடைச் சங்ககாலமும் அதுவே தான் என முடிவு கூறுகின்றார். இவ்வாறு கூறக் காரணம் சிலப்பதிகாரம் கடைச் சங்க நூலாகக் கருதப்படுகின்றமையே! ஆனால் அடியார்க்கு நல்லார் கூறும் வானியற் குறிப்புக்கள் தவறு என நவில்கின்றார். எனவே தவறான சில குறிப்புகளைக் கொண்டு நேரிதான முடிவைக் கூறுதல் இயலாது ஆகையால் சாமிக்கண்ணு பிள்ளையவர்களின் கருத்து ஏற்புடையதல்ல என்பர் பிற அறிஞர்கள்.

இங்கு, பிள்ளையவர்கள் கணித்துக் கூறியது சிலப்பதி காரம் கூறும் வானியற் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டா? என்பது கவனிக்கத்தக்கது. அடியார்க்கு நல்லார் குறிப்பெனில் இவரே அதனைத் தவறு என்று உரைக்கின்றார்.

திரு கே. ஜி. சங்கர ஐயர் கி. பி. ஒன்று முதல் கி. பி. 1400 வரையும் உள்ள கால இடைவெளியில் சிலம்பின் சோதிடக் குறிப்புப் பொருந்தி வரவில்லை என்று கூறுகின் றார். இவற்றை நோக்கும்போது சங்ககாலம் கி. பி. 8ஆம் நூற்றாண்டு என்ற கருத்து ஏற்புடைத்தாக அமையவில்லை.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு

கி. பி. ஏழாம் நூற்றாண்டே சங்ககால எல்லையாக இருக்கலாம் என்று கூறுகின்றவர்கள், திருநாவுக்கரசர் தம் வரலாற்றைக் காட்டுவர். இவர் வாழ்ந்த காலம் மகேந்திரன் காலமாய 600முதல் 680 வரை உள்ள காலம். அவர்தம் தேவாரத்தில் காணப்படும்,