பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 47

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கருளினேன் காண்

என்ற பகுதி முதன்முதலில் சங்கம் இருந்தமையைக் குறிக் கின்றது. எனவே ஏழு அல்லது ஏழாம் நூற்றாண்டுக்குமுன் சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.

இங்கு சங்கம், தருமி என்ற சொற்களில் அடங்கியுள்ள கதை, வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டதா? புராணக் கதையா? இந்தக் கதை நிகழ்ச்சி சங்கப் பாடல் களில் உள்ளதா? போன்ற ஐயப்பாடுகள் ஏற்படுகின்றன. மேலும் இந் நூற்றாண்டில் பாடப்பட்ட தேவாரம் போன்ற தெய்வீகப் பாடல்களில் எளிய நடைக்கும் சங்க காலத்தில் தோன்றிய இயற்கையோடு இயைந்த பாடல்களின் இலக்கிய முறைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் கடந்திருக்க வேண்டும். எனவே 7ஆம் நூற்றாண்டில் சங்கம் என்ற சொல்லாட்சியினை மட்டும் காண்கின்றோம் என்று இக் கருத்தை ஏற்க மறுக்கின்றார் பன்னிர் செல்வம் அவர்கள்.

கி. பி. ஆறாம் நூற்றாண்டு

மணிமேகலையில் குச்சர குடிகை குமரியை மரீஇ’ என்ற சொற்கள் வருகின்றன. அவை கூர்ச்சரம் என்ற நாட்டைக் குறிக்கின்றன என்றும், கூர்ச்சரர்கள் கி. பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் என்றும் சங்க இலக்கியம் அவர்கள் காலத்தில்தான் எழுந்தது என்றும் மு. இராகவ ஐயங்கார் உரைப்பர். இச் சான்று சொல் ஒற்றுமையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதால் ஏற்புடைத்தாயில்லை என்பர். ஆனால் புதைபொருள் ஆய்வு இயக்குநரான டாக்டர் என்.பி. சக்கரவர்த்தி அவர்கள் இம்முடிபை ஏற்றுக் கொள்கின்றார்.