பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்நாடு தொன்மையும், சிறப்பும் வாய்ந்தது. “மனித நாகரிகம் வளர்ந்த தொட்டில்” என்று லெமூரியாக் கண்டத்தைக் குறிப்பிடுவர். இன்றுபோல் இல்லாமல் குமரி முனை இன்னும் சற்றுத் தெற்கே விரிந்து இருந்தது. அங்கே குமரி மலை இருந்தது. குமரி ஆறு ஓடிற்று பஃறுளி ஆறு பாய்ந்து சென்றது. இச் செய்தியினை,

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’ என்ற சிலப்பதிகார அடிகளால் அறிகிறோம்.

இவ்வாறெல்லாம் தமிழ்நாட்டினுடைய தொன்மையும் சிறப்பும் வரலாற்றுப் பரம்பரையும் நல்ல தமிழ் நூல்களில் நவிலப்படுகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டின் தொன்மை யினையும், சிறப்பினையும் பல்வேறு இலக்கியங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

தமிழ்நாட்டின் பழமையினையும் சிறப்பினையும் போலவே தமிழ் இனத்தின் தொன்மையும் சிறப்பும் நினைக்கற்பாலன.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி’ எனும் புறப்பொருள் வெண்பாமாலை தமிழ்க்குடியின் பழமையினைப் பேசுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இணையிலாக் கவிஞர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்,

“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த

தமிழோடு பிறந்தோம் நாங்கள்’ என்று தமிழ்மொழியின் பழமையினையும், தமிழ்க்குடியின் தொன்மையினையும் குறிப்பிட்டார். அந்த அளவிற்குத்