பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 49

5ஆம் நூற்றாண்டு. இவ் விரண்டு கருத்துடைய பாடல்களை யும் பாடியவர் மாமூலனார். எனவே சங்க இலக்கியங்களில் பாடல் செய்துள்ள மாமூலனாரும் அந்தக் காலத்தைச் சார்ந்தவர். எனவே சங்கம் இருந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும் என்ற முடிவினைக் கூறுகின்றார்.

இப் பாடலில் வரும் நந்தர் என்ற சொல் நந்தர் குலத்தைக் குறிப்பது. நந்த வம்சம் மோரியருக்கு முற் பட்டது. நந்தர்தம் இறுதி அரசன் மகாபத்ம நந்தன் காலம் கி. மு. 371. எனவே நந்தரைப் பற்றிப் பாடிய மாமூலனாரும் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் ஆதல் வேண்டும். ஆனால் இது ஏற்புடைய கருத்து ஆகாது என்பர் பன்னிர் செல்வம்.

மெளரியர் காலம் சந்திர குப்தன் காலத்தில் துவங்கு கிறது. கடைசி நந்தனை அழித்து விட்டுக் கி. மு. 322ல் அரியணை ஏறுகிறான் சந்திரகுப்தன். இவனுக்கு பின் சமுத்திரகுப்தன் ஆட்சிக்கு வருகிறான். இவன் கி. பி. 386 முதல் 380 வரை ஆட்சி செலுத்துகின்றான். தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து காஞ்சியில் விஷ்ணுகோபப் பல்லவனையும், கேரளத்தில் ஒரு தலைவனையும் வென்ற வன் இவனே. இது நான்காம் நூற்றாண்டில் நடைபெறு கிறது. இவ் வரலாற்றுப் போர் நிகழ்ச்சியினைச் சங்கப் புலவர்களில் ஒ ரு வ ர் தான் அறிந்திருக்க முடியுமா? வரலாற்றுப் புலவர் என்று கருதப்படும் சேரன் புகழ்பாடிய பரணர் சேரநாட்டின்மீது வடபுலத்தரசன் படையெடுத்து வந்து வென்ற செய்தியினைக் குறிப்பிடாது இருப்பாரா? மேலும் இப் படையெடுப்பு நான்காம் நூற்றாண்டில் இடை யில் நடக்க ஐந்தாம் நூற்றாண்டினைச் சார்ந்தவராக மாமூலரைக் கூறுவது எங்ஙனம் பொருந்தும் என்ற வினாக் கணைகள் தொடுக்கப்படுவதால் இவ்வாறான சிக்கல்கள் காரணமாக 5ஆம் நூற்றாண்டு என்று கூறுவதும் ஏற்புடைத் தாகத் தோன்றவில்லை.