பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சங்க இலக்கியம்

கி.பி. நான்காம் நூற்றாண்டு

மாணிக்க வாசகர் காலத்தை நான்காம் நூற்றாண்டாகக் கொண்டு,

வானுயர் மதிற்கூடலி னாய்ந்த ஒன்டீந் தமிழின் துறைவாய்ப் புக்கனையோ என்று அவர் கூறுவதால் சங்ககாலம் நான்காம் நூற்றாண்டாகவும் இருக்கக் கூடும் என்ற கருத்து உளது. மணிவாசகர் காலத்தைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுவதால் இக் கொள்கையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

சங்க நூல்கள் பல்லவரைப்பற்றி ஒரிடத்திலாயினும் குறிப்பிடாது இருத்தல் நோக்கற்பாலது. அவர்கள் கி. பி. 7ஆம்நூற்றாண்டிலேயே செல்வாக்குப் பெற்றுவிளங்கினாலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆட்சியைத் தொடங்கி விட்டனர். இதனை அவர்களது பாகதச் சாசனங்களால் தெளியலாம். மு. டி. யு ைட மூவேந்தரையும், குறுநில மன்னரையும் அடைந்து அவர்கள் புகழையும், வீரத்தினை யும் பாடிய சங்க காலப் புலவர் ஒருவராவது பல்லவரைப் பற்றிக் குறிப்பிடாதிருத்தல் சங்க நூல்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்ற கொள்கையை வற்புறுத்தும் என்று வித்தியானந்தன் அ வ ர் க ள் கூறியுள்ளார்.

சங்க காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்ற இக் கருத்து சங்ககால வரையறைக்குச் சிறிது நெருங்கி வருவதாய் உள்ளது.

மூன்றாம் நூற்றாண்டு

சங்கத்தின் இறுதி எல்லையைக் கி.பி. 3ஆம் நூற்றாண்டாகக் கொள்வது வரலாற்று ஆய்வுக்குப் பொருத்த மானது என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் கருத்தாகும்.