பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 53

பட்டது. குமரியாறு கடல் கொள்ளப்பட்டதன் பின்னரே முடத்திரு மாறனால் கடைச்சங்கம் தொடங்கப்பெற்றது. பஃறுளியாறு முதற்கடற்பெருக்கிலே மறைந்தொழிந்தது. அங்ஙனம் இருப்பப் புறநானூற்றுள்,

நெடியோன் கன்னிர்ப் பஃறுளி மணலினும் பலவே

என்னும் தொடர் முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தும் பாட்டில் காணப்படுகிறது.

நெடியோனுக்குப் பின்னே வாழ்ந்தவன் முதுகுடுமி என்பது தெளிவு. நெடியோன் காலத்திலேயே பஃறுளி என்னும் ஆறு கடல் கோட்பட்டதாயின் முதுகுடுமிக் காலத்தே அது நிலவியிருத்தல் முடியாது. கடலுள் மறைந்த ஆற்றினைப் பற்றிப் புலவர் பாடுதற்கும் இடமில்லை. முதுகுடுமிக்குப் பின் முடத்திருமாறன் காலத்தில்தான் பஃறுளி ஆறு கடல்கொள்ளப்பட்டதெனின் குமரியாறு அக் காலத்தில்தான் கடல்கோட்பட்டிருத்தல் வேண்டும். பஃறுளி யாறும், குமரியாறும் ஒரே காலத்தில் கடல்கோட்பட்ட தென்றால் இடைச்சங்கத்தார் காலத்திற்குக் குமரியாறு தென்னெல்லை என்பதும், இடைச்சங்கத்திற்கு முன்னே கடல்கோள் நிகழ்ந்தது என்பதும் தவறாய் முடியும். ஆதலின் இப் புறநானூற்றுப் பாடலில் இடம்பெறும் பஃறுளி யென்பதும் மறைந்த பஃறுளி ஆற்றுக்கு ஈடாக நெடியோனால் உளதாக்கப் பெற்றது திண்ணம்.

எனவே கடைச்சங்கத்தார் காலம் (இறையனார் களவியல் உரை கருத்துப்படி) மூன்றாம் நூற்றாண்டில் முடிவு செய்யப் பெற்றதாக விளங்கும் என்பர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

நெடுஞ்செழியன் கி.பி. 174 முதல் கி.பி. 204 வரை ஆட்சி செய்தவன். அவன் பாடிய,