பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சங்க இலக் கியம்

முடியாமல் இருக்கின்றது. உக்கிரப் பெருவழுதி கரிகாலனின் தந்தையாய இளஞ்சேட் சென்னியின் காலத்தவன் எனப் படுகின்றான். கரிகாலனின் காலம் கி. பி. 50க்கும் 90க்கும் இடையில் என நிறுவப்பட்டுள்ளது. ஆகவே சங்க காலம் கி. பி. முதல் நூற்றாண்டளவில் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் சங்க காலத்தைப் பற்றி செளரிராயன் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை யின் பொழிப்பை எடுத்துக் காட்டுகின்றார்.

சில சங்க இலக்கியங்கள் வழிகின்று காலத்தை அறுதியிடல்

தமிழகத்திற்குப் புதியவராய பிராகிருத - வடமொழி வல்லுநராய பல்லவர்கள் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் காஞ்சியைக் கைப்பற்றித் தொண்டை நாட்டை ஆண்டனர்.

தமிழகத்தைக் காலம் காலமாக உரிமை பூண்டிருந்த முடிகெழு மூவேந்தரும் தம் நாட்டைக் களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் பறிகொடுத்த நிலை உண்டான காலம் கி.பி. 4, 5ஆம் நூற்றாண்டு ஆகும். மேலும் கி.பி. 800 முதல் கி. பி. 600 வரை தமிழகத்தின் இருட்டடிப்புக் காலமாக தழிழுலகத்தில் கூறப்படுகிறது. எனவே இக் காலத்தில் உறுதி யாகச் சங்கம் இருந்திருக்க முடியாது.

இதனை நோக்கத் தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் வரை உள்ள நூல்கள் அனைத்தும் கி. பி. 200க்கு முற் பட்டவை என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. இவற்றுள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.

புறநானூற்றின் காலம்

இந் நூலில் காணப்படும் பெருஞ்சோற்று தியன் சேரல: தன் வான்மீகியார் என்பவரின் பாடல், மோரியர்