பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 57

படையெடுப்பு இரண்டாம் கரிகாலன் இமயப் படையெடுப்பு இவை போன்ற குறிப்புகளைக் கொண்டு இதன் காலத்தை வரையறை செய்வர்.

சிலப்பதிகாரம் கூறும் இரண்டாம் கரிகாலன் இலங்கை மீது படையெடுத்த காலம் கி. பி. 111 - 114 என்று இலங்கை வரலாறு கூறுவதால் கரிகாலன் காலம் கி. பி. முதல் நூற்றாண்டின் இறுதியும், கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம் எனக் கருதுவர்.

இவ்வரசனைத் தவிர நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன் போன்ற பிற சோழ அரசர்கள் கரிகாலனுக்கு முற்பட்டவராகவும் பிற்பட்டவராகவும் இருந் திருக்கக் கூடும்.

கி.பி. 300க்குப் பின்பு பல்லவர்களும், கி.பி. 400இல் அச்சுவிக்கந்தன் என்ற களப்பிர குலகாவலன் பேரரசனாய் விளங்கியமையாலும் புறநானூற்றின் இறுதிக்கால எல்லை கி.பி. 300 என்று கூறுவர். இதைப்போலவே பிறதொகை நூல்களின் காலமும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு எனவும், அதற்கு முன்னரும் என வரையறை செய்யப்படுகிறது. இந்த நூல்களின் காலத்தை வரையறுப்பதிலும் வேறுபாடுகள் காணப்படினும் சங்ககால நூல்களின் பாடுபொருள்கள், பிற்கால நூல்களின் ஒழுக்கம், சமூக மரபுகள், சமயக் கூறுபாடுகள் இவற்றைக்கொண்டு ஆாாயின் இப் பண்புகள் பல சங்க நூல்களைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலப்பகுதிக்கு உரியவாக்குகின்றன, என்று கூறுவர் வித்தியானந்தம் அவர்கள்.

சங்ககாலம் பற்றிய மேல்எல்லை

தலைச்சங்கப் புலவராக இறையனார் களவியல் உரை

யில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பார் குறிக்கப்பட்டுள்ளார்.

பாரதப் போரில் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ்

சங்க.-4