பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 59.

தலைச்சங்கம் தொடங்கிற்று எனலாம் என்று அவர் கூறுகின்றார்.

பசும்பூண் பாண்டியன் ஆப் நாட்டைக் கைப்பற்றியது ஏறக்குறைய கி.பி. 70 ஆம் நூற்றாண்டில் ஆகும். இவனுக்கு முன்பும் பின்பும் ஆண்ட அரசர் ஒவ்வொருவரும் இருபத் தைந்து ஆண்டுகள் வரை ஆண்டவர் எனக் கொண்டு கணக்கிட்டால் பொதுவாகச் சங்க காலத்தைக் கி.மு. முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு உரியது என்று வித்தியானந்தன் கூறுகிறார்.

ப. இரங்காச்சாரி என்பவர் சங்ககாலத்தின் தொடக்க காலமாகக் கி.மு. 300 என்ற வரையறையைக் குறிக்கின்றார். இராமச்சந்திர தீட்சிதர் கி.மு. 500 என்ற வரையறையைக் குறிக்கின்றார். இவர்களது கருக்துக்கு மாறாக கி.மு 4 என வரையறை செய்கிறார் கனகசபைப் பிள்ளை அவர்கள்.

இவை மட்டுமன்றிக் கி மு. 5000 அளவில் தலைச்சங்கம் இருந்தது என்றும், கி.மு 3000 ஆண்டு கட்குப்பின் இடைச் சங்கம் நிலவியதென்றும், கி. மு. 500 ஆவது ஆண்டில் நிகழ்ந்த கடல்வெள்ளத் தி குப் பின் கடைச்சங்கம் ஏற்பட்டது என்றும் கூறுவாரு முளர். இன்னும் ஒருசாரார் கி.மு. 12 ஆம் நூற்றாண்டிற்கு முன் தலைச்சங்கம் இருந்தது என்றும், அதற்குப்பின் கடைச்சங்கம் இருந்தது என்றும் கூறுவர். மற்றொரு சாரார் முச்சங்கம் இருந்ததில்லை என்றும் சங்கம் ஒன்றே என்றும் கூறுவர். *

முடிவுரை

1. கி.பி. எட்டாம் நூற்றாண்டு எனக்கூறும் சாமிக் கண்ணுப் பிள்ளை அவர்கள் தம் கருத்துக்கு அரணாகச் சிலப்பதிகாரம் கூறும வானியற் குறிப்புக்களை அடிப் படையாக கொண்டா? அல்லது அடியாாக்கு நல்லார்தம் குறிப்புகளைக் கொண்டா? என்பது தெளிவாகவில்லை. மேலும் அடியார்க்கு நல்லார் கூறும் சோதிடக் கருத்துக்

so