பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

60 சங்க இலக்கியம்

களை அவரே தவறு என உரைத்துவிடுகிறார். மேலும் ஒன்று முதல் 1400 வரை உள்ள கால இடைவெளியில் சோதிடக் குறிப்புப் பொருந்தி வரவில்லை என்ற கருத்தும் உள்ளது. எனவே சங்ககாலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டல்ல.

எனக் கருத வாய்ப்பு ஏற்படுகிறது.

2. கி.பி. 7ஆம் நூற்றாண்டே சங்ககாலமாக இருக்கலாம் என்று கூறி, தேவாரப் பகுதி சான்றாகக் காட்டப்படுகிறது. முதன்முதலில் சங்கம் என்ற சொல்தேவாரத்தில் காணப்படு வதால்மட்டும் சங்ககாலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகிவிட முடியுமா? பண்பாடு என்ற ஒரு சொல்கூடத்தான் தமிழிலக்கி யத்தில் காணப்படவில்லை. எனவே தமிழர்கள் பண்பாடற்ற வர்கள் எனக் கூறிவிட இயலுமா? மேலும் சங்கம் என்ற சொல்லே இடம்பெறாமற் போனாலும் சங்கத்தைக் குறிக்கும் பல்வேறு பழைய இலக்கியச் சான்றுகள் நமக்குக் கிடைக் கின்றன. இதனையெல்லாம் நோக்கும்போது சங்ககாலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்ற கருத்தும் ஏற்புடையதாக இல்லை எனக் கருத இடமேற்படுகிறது.

3. மணிமேகலையில் இடம்பெறும் குச்சரபீடிகை. “குமரியை மரீஇ போன்ற சொற்களைக்கொண்டு சங்க காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என உரைக்கின்றார் மு. இராகவ ஐயங்கார். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள். அவற்றைப் பாடிய புலவர்கள் இருவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள், என்றெல்லாம் கூறப்படும் கருத்து அறிஞர் உலகத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகக் காட்டப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் காலம் 2ஆம் நூற்றாண்டு ஆகையால் மணிமேகலையின் காலமும் கி.பி. 2ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்கமுடியும். எனவே இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலையில் இடம்பெறும் சொற்கள் அவைகள் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கூர்ச்சரர்களைக் குறித்தது எனக்கொண்டு சங்க காலத்தை ஆறாம் நூற்றாண்டு எனக் கூறுவது பொருத்த மாகத் தோன்றவில்லை.