பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பதிற்றுப்பத்தின் இலக்கிய வளம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் பொற்காலம் என்று போற்றப்பெறும். சங்க இலக்கியம் என்று வழங்கப் பெறும் இலக்கியங்கள் பாட்டும் தொகையும் எனலாம். “மூத்தோர்கள் பாடியருள் பாட்டும் தொகையும்’ என்று குறிப்பிடப்படும் தொடரில் பாட்டு என்பது பத்துப் பாட்டினை யும் தொகை என்பது எட்டுத் தொகையினையும் குறிக்கும். திருமுருகாற்றுப்படை முதலாக மலைபடுகடாம் ஈறாக உள்ளது பத்துப் பாட்டாகும். நற்றிணை முதலாகப் புறநானூறு இறுதியாக அமைந்திருப்பது எட்டுத் தொகை யாகும். எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றிய நூல்களாகும். பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றிய நூல் களாகும். பரிபாடல் அகம், புறம் ஆகிய இரு பொருள்களும் பற்றியெழுந்த நூலாகும்.

பத்துப்பத்து எனப்படுவதே பதிற்றுப்பத்து ஆகும். பத்துப் பத்தாகப் பத்துத் தொகைகளையுடைய பாடல் தொகுதி என்று பெயர். நற்பேறின்மை காரணமாக இன்று முதற்பத்தும் இறுதிப்பத்தும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைப்பட்ட எட்டுப்பத்துகளே கிடைக்கின்றன. பதிற்றுப் பத்தின் தனிச்சிறப்பு இது பண்டை நாளைச் சேர மன்னர் களைப் பற்றிய நூல் என்பதே. பழந்தமிழ்ச் சேர நாட்டின் வரலாறு முழுவதனையும் ஒருங்கே புலப்படுத்த வல்லதாய் இப் பதிற்றுப்பத்து அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தின் இரண்டாவது பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப்