பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 65

பற்றிக் குமட்டுர்க் கண்ணனாரும், மூன்றாவது பத்தில் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாலைக் கெளதமனாரும், நான்காவது பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பற்றிக் காப்பியாற்றுக் காப்பியனாரும் ஐந்தாவது பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பற்றிப் பரணரும், ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிக் காக்கை பாடினியார் நச்செள்ளை யாரும், ஏழாம் பத்தில் செல்வக் கடுங்கோ வழியாதனைப் பற்றிக் கபிலரும், எட்டாவது பத்தில் பெருஞ்சேரல் இரும் பொறையைப் பற்றி அரிசில் கிழாரும், ஒன்பதாவது பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப்பற்றிப் பெருங் குன்றுார்க் கிழாரும் பாடியுள்ளனர். முதல் பத்து உதியஞ் சேரலைப் பற்றியதாக இருக்கவேண்டும் எனவும், பத்தாவது பத்து யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்பானைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்றும் அறிஞர் சிலர் கருதுவர். பதிற்றுப்பத்திற் காணப்படும் சில தொடர் களைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம் என்றும் கூறுவர்.

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று

-திருக்குறள், குடிமை 5

என்னும் திருக்குறளுக்கு உரை கூறுமிடத்துப் பரிமேலழகர் என்னும் திருக்குறளின் சிறந்த உரையாசிரியர் “பழங்குடி’ என்னும் சொல்லிற்கு விளக்கம் எழுதுமிடத்து, “படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருங்குடிகள் இம் மூவேந்தரும்’ என்று சேர, சோழ, பாண்டிய அரசர் குடிகளைச் சுட்டுவர். மேலும் தொன்னுரலாம் தொல்காப்பியத்தில்,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு

-தொல்; பொருள்; செய்யுளியல். 79

என்று மூவேந்தர் நாடுகளும்,