பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 67

உலக்கையை வாழை மரத்தின் கண்ணே சார்த்தி வைத்து விட்டு, வள்ளைப் பூக்களைப் பறிப்பதற்கு வயலில் இறங்குவார்கள் என்றும், அந் நெல் வயல்களுள் பருத்த நெற்கதிர்கள் வளைந்து கிடக்கின்றன என்றும் அழகுறக் குறிப்பிடுவர்.

அவலெறி உலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயல்

—9: 1 - 3

மேலும் அவர், காலம் அல்லாக் காலங்களிலும் சேர நாட்டில் கரும்பு நிறைய விளைந்து அறுவடை செய்யப் படுவதனை

காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது

—10: 14

என்று குறிப்பிடுவர். சேரன் காத்தோம்பிய நாடு பெயல்

வளம் மிகுந்து, அதனால் வயல் வளம் சிறந்து, குறைவு. படாத புது வருவாயினைக் கொண்டு திகழ்ந்தது என்பதனை மிகமிக நயமுற,

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர் வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதோ டாகியம் நிற்பக் கலிழுங் கருவியொடு கையுற வணங்கி மன்னுயிர் புரை இய வலனேர்பு இரங்கும் கொண்டல் தண் தளிக் கமஞ்சூல் மாமழை காரெதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்தால் வாழ்ககின் வளனே

—4: 23 – 30:

என்று கிளத்துவர்.