பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்

வளம்பல கிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்’

என்பார் பாலைக் கெளதமனார்.

‘காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது’ என்றும்,

“மறாஅ விளையுள் அறாஅ யாணர்’ என்றும் சேர நாட்டு வளம் செப்பப்படுகின்றது.

சேர நாட்டின் பெண்மணிகள் இரவும் பகலும் தாங்கள் அணிந்திருந்த அணிகலன்களைக் களைவது இல்லை என்று அவர்தம் செல்வச்செழிப்பை எடுத்துக்கூறுவர், அரிசில் கிழார் என்னும் புலவர். சேரர்கள் வீரத்திலும் விளங்கி நின்றார்கள்; கொடைவளத்திலும் சிறந்து நின்றார்கள்: மழையே பொய்த்தாலும் சேரலாதன் கொடை வழங்குதலில் பொய்க்கமாட்டான் என்பர். இவ்வாறு பல்வேறு வளமும் பாங்குறப் பெற்ற நாடு எனச் சேர நாடு செப்பப்படுகிறது. இவ் உண்மைகளை எடுத்துக்காட்டுவது ஐந்தாவது கட்டுரை.

ஆற்றுப்படை இலக்கியம் தமிழின் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்து மொழிவதாகும். பத்துப்பாட்டின் முதற்பாட்டு திருமுருகாற்றுப்படை. அத் திருமுருகாற்றுப் படை உலகம் உவப்ப எனத் தொடங்குகின்றது. பிற் காலத்தே எழுந்த பெரிய புராணமும், கம்பராமாயணமும் உலகம்’ என்ற சொல்லாலே தொடங்குகின்றன. உலகம் ஒளி பெற உதவுவது கதிரவன் ஆகும். -

‘அகலிரு விசும்பிற்கு ஒடம் போலப் பகலிடை கின்ற பல்கதிர் ஞாயிறு’

எனக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும். கதிரவனைப் பற்றிய குறிப்பு மிகப் பல இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கின்ற தனைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டு மகாகவி பாரதியார்,