பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘70 சங்க இலக்கியம்

மாகத் திருவிழாக்கள் பலவற்றை அயர்ந்தனர். குரவைக் கூத்தும் துணங்கைக் கூத்தும் அவர்களால் விரும்பி மேற் கொள்ளப்பட்டன என்றும், இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சி யுடன் கூத்தாடுமிடத்தில் சுரை நிறைய நெய் பெய்து பெரிய திரி யிட்டுக் கொளுத்தப்பட்ட நெடுவிளக்கு வைக்கப் பட்டிருந்தது என்பதனை ஐந்தாம் பத்தில், பரணர்.

சொகுசுரை கவரு நெல்வழிபு உராலின் பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல நன்னுதல் விறலியர் ஆடும்

–7 : 5-7

என்று குறிப்பிட்டுள்ளார். மருத நிலத்தில் வாழ்ந்த மகளிர் இரவும் பகலும் தாங்கள் அணிந்திருந்த அணிகலன்களைக் கூடக் களையாமல், செல்வக் களிப்புமிக்க விளையாட்டினை விரும்பிக் குரவைக் கூத்து அயர்ந்தார்கள் என்று அரிசில் கிழார் எட்டாவது பத்தில் ஏற்றமுடன் எடுத்துரைக்கின்றார்.

மருதம் சான்ற மலர்தலை விளைவயல் செய்யுள் நரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யாணர்க் குரவை அயரும்

–3 : 4-7

இனி, சேரர்தம் படை வீரத்தினைக் காண்போம். சேரர்கள் கடற்போரில் வல்லவர்கள் என்ற செய்தி பதிற்றுப் பத்தின் பலவிடங்களில் பகரப்படுகின்றது.

இருமுந்நீர்த்துருத்தியுள் முரணியோர் த தலைச்சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் சேரன்

—10 , 2-4

என்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் குறிப்பிடப் பெறுகின்றான். செங்குட்டுவன் பகைவரின் கடற்படை