பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£O சங்க இலக்கியம்

செல்லும் வழியில் தோப்புக் குடிகள், பேரூர்கள், வள்ளிக் கூத்தாடும் மக்கள் உள்ள சிற்றுார்கள். இவற்றுக்கப்பால் உள்ள திருவெஃகா, அங்குள்ள அடர்ந்த சோலை, நீர்வளம், அப்பால் உள்ள கச்சிமூதுர் இவை 352 முதல் 892 வரை உள்ள அடிகளில் சிறப்பித்து உரைக்கப்படுகின்றன. 898-411 வரை உள்ள அடிகள் காஞ்சியின் புகழ் பாடுகின்றன. இளந்திரையன் வீரம், அரசிகள் அவனைப் பாாாட்டல், உபசரிப்பு, கொடைச்சிறப்பு இவற்றை 411 முதல் 500 வரை உள்ள அடிகளில் குறிக்கின்றார்.

கூத்தராற்றுப்படை

மலையை யானையாகவும், மலையில் தோன்றிய ஓசை களை மதநீர் பாயும் ஒசையாகவும் உ ரு வ கி த்து ‘மலைபடுகடாஅம் மாதிரத்தியம்ப’ என்று கூறியுள்ளமையால் இது மலைபடுகடாம் எனவும் என்று கூறியுள்ளமையால் இது மலைபடுகடாம் எனவும், பரிசில் பெற்று வந்தால் ஒருவன் வழியிற் கண்ட கூத்தன் ஒருவனை ஆற்றுப்படுத்தியமையாற் கூத்தராற்றுப்படை எனவும் பெயர் பெற்றது. இது செங்கண் மாவைத் தலைகராகக் கொண்ட நன்னனின் மகனாய நன்னன் மீது பாடப்பட்டது. 518 அடிகளை உடையது. இதனைப்பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார்.

முதல் 11 அடிகளில் இசைக்கருவிகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 11 முதல் 20 வரை உள்ள அடிகளில் கூத்தனை எதிர்ப்பட்ட வழியின் இயல்பு கூறப்படுகிறது. கூத்தர் கைக்கொண்ட பேரியாழின் இயல்புகளை 21 முதல் 37 வரை உள்ள அடிகள் சிறப்பிக்கின்றன. 46 முதல் 50 வரை உள்ள அடிகள் கூத்தனின் இருக்கையையும், 51 முதல் 53 வரை உள்ள அடிகள் பரிசில் பெற்றுவரும் கூத்தன் நிலைமையையும் விரிக்கின்றன. நன்னன் சேய் நன்னன் பெருமையை 58 முதல் 94 வரை உள்ள அடிகள் விளக்கு