பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சங்க இலக்கியம்

3. பரிசில் பெற்ற பாணன் வள்ளலைக் காணுமுன் இருந்த வறுமைநிலை பரிசில் பெற்ற பின் பெற்ற செல்வ நிலை இவற்றை அறியமுடிகிறது.

4. புரவலன் இயல்புகள், அவன் தலைநகரத்துக்குச் செல்லும் வழி, தலைநகர்ச் சிறப்பு, ஆண்டுள்ளோர் வரவேற்பு, விருந்தோம்பற் சிறப்பு, பரிசு வழங்கல் இவற்றைத் தெளியமுடிகிறது.

“ஒவ்வோர் ஆற்றுப்படையிலும் கூறியவழி சுற்றுவழி யாகவே உள்ளது. அவ்வழி அக்காலமக்கள் பயணம் செய்த வழியாயிருந்திருக்கலாம் (அ ல் ல து) ஐவகை நில வருணனையை ஆற்றுப்படையிற் புகுத்திக் கூறவேண்டும் என எண்ணி அவற்றை உள்ளடக்கிய சுற்று வழியாகவும் இருக்கலாம். உண்மை இப்பொழுது அறியுமாறில்லை’ எனவும், “ஒவ்வொரு வழியிலும் அவ் வழியைக் கூறிய புலவர் கள் ஐவகை நில வருணனையை விடாமற் கூறியிருப்பதைக் காண இவ் வழிகள் புலவர் கற்பனை வழிகள் ஆகலாம் என்று கருதுதல் தரும்’ எனவும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் குறிக்கின்றார்.

திருமுருகாற்றுப்படை

இது புலவராற்றுப்படை எனவும் கூறப்படும். இது தொல்காப்பியர் காலத்தும் அதற்கு முன்னும் காணப்படாதது. மனிதனைத் தெய்வத்திடம் ஆற்றுப்படுத்தும் நிலை அக் காலத்தில் அறவே இல்லை. இந்நூல் வீடுபேறு பெற விரும்பிய புலவன் ஒருவனை அப்பேறு பெரும் வகை அறிந்த புலவன் ஒருவன் முருகன்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந் துள்ளது. இதனைப் பாடியவர் நக்கீரர். சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர், சம்பந்தர் காலத்திற்கு முன்னும் பாடப் பட்டதாக இருக்கலாம் என்பது டாக்டர் மா. இராச