பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

“புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி

மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விந்தை செய்யும் சோதி’ என்று கதிரவனைக் குறிப்பிடுவர். பாரதிதாசன்

“காலை யிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்’ என்று அழகு உறையும் இடமாகக் கதிரவனைக் குறிப் பிடுவர். இத்தகைய செய்திகள் எல்லாம் எட்டாவது கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

‘சங்க இலக்கியத்தில் அணி நலம் என்னும் கட்டுரை உவமைச் சிறப்புமிக்க சங்க இலக்கியத் தொடர்களைத் தொகுத்துக் கொடுக்கின்றது. தற்குறிப்பேற்ற உவமை, தடுமாறு உவமை, விலக்குவமை, இல்பொருள் உவமை, அந்தாதி உவமை, இரட்டை உவமை, நிரல்நிறை உவமை, பல்பொருளுவமை, பிறிதுமொழிதலணி, விபரீத உவமை, மாலை உவமை, வேற்றுமை அணி என்பனவெல்லாம் விரித்துக் கொடுக்கும் சங்கத் தமிழ் பரப்பு, உவமைச் செல்வங்களை ஒருங்கிணைத்துக் கொடுக்கின்றது.

  • *
  • * * * * = H = H is is H. சாரற சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ என்றும் குறுந்தொகை உவமை, என்று நினைத்தாலும் நின்று இன்பம் தருவதாகும்.

பத்தாவது கட்டுரை, பண்டைத் தமிழரின் வணிகம்’ என்ற பெயருடையதாகும். தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ்க்குடியினர் காலிற் பிரிந்தும், கலத்தில் பிரிந்தும், வாணிகம் செய்வதில் வல்லவர். பன்னாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தவர்கள் அவர்கள். தமிழ் நாட்டு முத்து கிரேக்கப் பேரரசியின் அணிகலனாயிற்று. சாத்துடை வழங்கும் உல்குடைப் பெருவழி என்னும் பெரும் பாணாற்றுப்படைத்தொடர் மிளகு வாணிகத்தைக் கூறும். பிற நாட்டினர் கலங்களில் வரும்பொழுதே பொன்னைக் கொண்டுவந்து அதற்கு மாற்றாக மிளகை வாங்கிச்