பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சங்க இலக்கியம்

புறப்பொருள் காட்டும் ஆற்றுப்படை

சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படைகளுக்கு விளக்கம் தரும் நூல் புறப்பொருள் வெண்பாமாலையே. தொல்காப்பியர் ஆற்றுப்படை பற்றிக் குறித்துச் செல் கின்றாரே தவிர அவற்றிற்கு எனத் தனி இலக்கணம் வகுக்க வில்லை. ஆற்றுப்படை இலக்கியத்திற்கு மட்டும் தனி இலக்கணம் வகுத்துச் செல்கின்றார். புறப்பொருள் வெண் பாமாலை பாடாண்திணை பற்றி விளக்கிக் கூறுகையில் நான்கு ஆற்றுப்படைகளுக்கும் இலக்கணம் கூறிச் செல்கிறது.

சேணோங்கிய வரையதனிற் பாணனை ஆற்றுப்படுத்தன்று எனப் பாணாற்றுப்படையையும்,

ஏத்திச் சென்ற இரவலன் கூத்தரை ஆற்றுப்படுத்தன்று எனக் கூத்தராற்றுப் படையையும்,

பெருநல்லான் உழையீராகெனப் பொருங்னை ஆற்றுப்படுத்தன்று எனப் பொருநராற்றுப்படையையும்,

திறல் வேந்தன் புகழ்பாடும் விறலியை ஆற்றுப் படுத்தன்று என விறலியாற்றுப் படையையும் விளக்கி நிற்கின்றது.

இதனையடுத்துக் கலம்பகம், தனிப்பாடல்களிலும் தனிச் செய்யுட்களாக வந்துள்ளன. பிற்காலத்தில் வேறொரு புலவராற்றுப்படை, திருத்தணிகை ஆ ற் று ப் ப ைட திருப்பாணாற்றுப்படை முதலியன இயற்றப்பட்டுள்ளன.