பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 95

மிறைவுரை

இவ்வாறாகத் தொல்காப்பியத்தில் வித்திடப் பெற்ற ஆற்றுப்படை புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் சில பாடல் களாக முகிழ்ந்து பத்துப்பாட்டில் பலநூறு வரிகளைக் கொண்ட தனித்தனி ஆற்றுப்படைகளாக மலர்ந்தன. இவ் வாற்றுப்படை இலக்கியத்திற்குப் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல் இலக்கணம் வகுக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையோடு இவ்வாற்றுப்படை மரபு மறைந்து விடவில்லை. பிற்காலத்தும் சில ஆற்றுப்படை இலக்கியங் கள் தோன்றி ஆற்றுப்படை மரபினைக் காத்தமையைப் புலவராற்றுப்படை முதலிய நூல்கள் காட்டுகின்றன. இவ்வாறாக ஆற்றுப்படை இலக்கியங்கள் இலக்கிய உலகில் தனித்த ஓர் இடத்தைப் பெற்று மிளிர்கின்றன.