பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பாடாண் திணை

பாடாண் - விளக்கம்

ஒரு மன்னனின் இசை, வலிமை, தண்ணளி, வண்மை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல் பாட்டு ஆகும். பாடாண் என்னும் சொல்லுக்குப் பாடப்படுகின்ற ஆண்மகனுடைய ஒழுகலாறு என்பது பொருள் என்றும் இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனவும் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியனார் இப் பாடாண் பகுதியை ஒன்பது நூற்பாக்களில் விளக்கிச் செல்கின்றார். முதலில் பாடாண் பகுதி கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாகும் எனவும், ஆய்ந்து நோக்கு மிடத்து அது எட்டுவகையினை உடையது என்பதனையும்,

பாடாண்பகுதி கைக்கிளைப் புறனே

நாடுங் காலை நாலிரண் டுடைத்தே (78) எள்ற நூற்பாவழி விளக்குகின்றார். எட்டுவகையாவன இன்னின்ன என்பதை இளம்பூரணர் கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல்வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளை வகை, வசை வகை என்பவற்றைக் குறிக்கின்றார்.

அமரர்கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப் படை, புகழ்தல், பரவல் முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சியின்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல். குற்றம் தீர்ந்த காமப் பகுதியிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விரு வகை