பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 97

யானும் ஒருவனைப் புகழ்ந்து பாடுவதும் பாடாண் பாட்டே என்பதை,

அமரர்கள் முடியும் அறுவகையானும்

புரை தீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப (79) ான்ற தொல்காப்பிய நூற்பாவழித் தெளியலாம்.

பாடாண் பகுதியை இவ்விரு நூற்பாக்களிலும் விளக்கிய வர் அடுத்துச் சில பொருட்கள் வரும் வேறுபாட்டினை உணர்த்துகின்றார்.

அதாவது பாடாண் பாட்டின் கண் வரும் செய்யுள் வரையறையை உணர்த்துகிறார்.

அதாவது தேவபாணியும், அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரையறுத்து ஒதப்பட்டதுபோல வழக்கியல் மருங்கின் வகைபெற நிறுத்திப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும் முன்னோர் கூறிய காமக்குறிப்பினும் செந்துறைப் பாட்டிற்கு உரிய செய்யுள் இவை என்று உரைத்தல் இல்லை என்பதை,

வழக்கியல் மருங்கின் வகைபட நிலை இப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கிலும் முன்னோர் கூறிய குறிப்பிலும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின்றாங்கே (80) ான்ற நூற்பாவில் தெளிவாக்குகின்றார்.

புரை தீர் காமம் புல்லிய வகையான் வரும் பாடாண் பாட்டு கடவுள் மாட்டும் வரும்; ஏனையோர் மாட்டும் வரும் என்பதை,

காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (81)

என்ற தொல்காப்பிய நூற்பா விளக்கி நிற்கின்றது.