பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சங்க இலக்கியம்

சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் நடைமிகுதது ஏத்திய குடைநிழல் மரபும் மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும் மன் எயில் அழித்த மண் ணு மங்கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் கிமித்தமும் காலம் கண்ணிய ஒம்படை உளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே

என்பது தொல்காப்பிய நூற்பா.

இவ்வாறாகத் தொல்காப்பியனார் பாடாண்திணையின் துறைகளாக 22 துறைகளைக் குறிக்கின்றார். புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் நாற்பத்தேழு துறைகளைக் குறிக்கின்றார். அவை.

1) வாயில் நிலை 2) கடவுள் வாழ்த்து 3) பூவை நிலை 4) பரிசில் துறை 5) இயன் மொழி வாழ்த்து 6) கண்படை நிலை 7) துயிலெடை நிலை 8) மங்கல நிலை 9) விளக்கு நிலை 10) கபிலை கண்ணிய புண்ணிய நிலை 11) வேள்வி நிலை 16) வெள்ளி நிலை 13) நாடு வாழ்த்து 14) கிணை நிலை 15) களவழி வாழ்த்து 16) வீற்றினி திருந்த பெரு மங்கலம் 17) குடுமி களைந்த புகழ்சாற்று நிலை 18) மண மங்கலம் 19) பொலிவு மங்கலம் 20) நாள் மங்கலம் 21) பரிசில் நிலை 22) பரிசில் விடை 23) ஆள்வினை வேள்வி 24) பாணாற்றுப்படை 25) கூத்தராற்றுப்படை 26) பொருநராற்றுப்படை 27) விறலியாற்றுப்படை 28) வாயுறை வாழ்த்து 29) செவியறிவுறுஉ 30) குடை மங்கலம் 31) வாள் மங்கலம் 32) மண்ணு மங்கலம் 33) ஒம்படை 34) புற நிலை வாழ்த்து 35) கொடிநிலை 36) கந்தழி 37) வள்ளி 38) பு ல வ ர , ற் றுப் ப ைட