பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

சென்றனர். பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி என்ற குறிப்பு இதற்குச் சான்று பகரும். தமிழர் வணிகத்தை மிக விளக்கமாக இந்தக் கட்டுரை புலப்படுத்துகின்றது.

பதினொன்றாவது கட்டுரையாக அமைந்துள்ள இசைக் கலை என்னும் கட்டுரை தமிழ் இசையின் தொன்மையினை யும் சிறப்பினையும் புலப்படுத்தி நிற்கின்றது. தொல்காப் பியனார் குறிப்பிட்டுள்ள கருப்பொருள்களுள் ஒன்று யாழ் என்பதாகும். யாழில் எழுவது இசை. ஒவ்வொரு நிலத் திற்கும் யாழைக் குறிப்பிட்டு அதன்வழி தமிழ் இசையின் தொன்மை புலப்படுத்தப்படுகின்றது. சில பாடல்களைப் பாடுகின்றபொழுது தினை உண்ண வந்த யானை தினை உண்ணாது இசையில் மயங்கி நின்ற செய்தி சங்க இலக்கியம் விளம்பும் செய்தி. வழிச்செல்வோரைத் தாக்கிவரும் ஆறலை கள்வரும் பாலைப் பண்ணிசையைக் கேட்டு, தம் செயல் மறந்து தம் கையிலே தாங்கி நிற்கின்ற கொலைக் கருவிகளைக் கீழே போட்டுவிட்டுத் தம் வன்கண்மை தவிர்த்து நிற்பாராம். இவ்வாறெல்லாம் இசைக்கலையின் சிறப்புப் பேசப்படுகின்றது.

இறுதிக் கட்டுரையான தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள், தமிழரின் அறிவியல் மதிநுட்பத்தினை விளக்க முற விளக்கி நிற்கின்றது.

முன்நூல்போல இந் நூலின் பதிப்பிற்கு உதவிய டாக்டர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என் நன்றி.

‘சங்க இலக்கியம்: சில பார்வைகள்’ எனும் இந்நூலில் யான் அரிதின் முயன்று எடுத்த குறிப்புகளைக் கொண்டு ஒழுங்குபடுத்திப் பல்வேறு கட்டுரைகளாக்கி ஒரு நூலாகத் தொகுத்துள்ளேன். பல ஆண்டுகள் தமிழ் ஆராய்ச்சிக் கடலிலே ஆழ்ந்து நான் எடுத்த நன்முத்துகள் இவை. வழக்கம்போல் எனக்கு அன்பு காட்டி ஆதரவு நல்கும் தமிழ்கூர் நல்லுலகம் இந்நூலினையும் ஏற்றிப் போற்று மென்று நம்புகின்றேன்.

-சி.பர.