பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 109

விரை செலல் திகிரி முதலான கதிரவனைக் குறிப்பிடும் சொற் கள் பழந்தமிழ் நூற்களிற் காணக் கிடக்கின்றன. மேலும், இளங்கதிர், ஒரு தனித் திகிரி, உலகு விளங்கு அவிரொளி, வெய்யவன், காய்கதிர்ச் செல்வன், பரிதியஞ் செல்வன், வெயிலிளஞ் செல்வன், பகலோன், நேமிவான் சுடர், வெஞ்சுடர் இகலி, பருதி, விரி கதிர்க் கடவுள், நிறை கதிர்க் கடவுள், நெடுந்தேர் இரவி, ஏழ்பரித் தேரோன் முதலான சொற்கள் பிற்காலக் காப்பியங்களில் கதிரவனைச் சுட்டும் பெயர்களாக நிலவுகின்றன.

கிழக்கே தோன்றி மேற்கே மறைபவன் கதிரவன் எனும் உண்மையினைப் பல இலக்கியங்கள் பகர்கின்றன. கதிரவன் கடலிடைத் தோன்றிப் பலர் புகழ் ஞாயிறாகவும் உலகு தொழத் தோன்றி வயங்கு கதிர் விரித்த உருகெழு மண்டில’ மாகவும் ஒளிர்வதை முறையே திருமுருகாற்றுப்படையும். குறிஞ்சிப்பாட்டும் குறிப்பிடுகின்றன. கதிரவன் மறையும் இம் மலை என்று குறிஞ்சிப் பாட்டும் நற்றிணை நானுறும் பின்வருமாறு நவில்கின்றன:

பலகதிர் மண்டிலம் கல்சேர்பு மறைய

-குறிஞ்சிப்பாட்டு : 215.216.

சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் மால்வரை மறையத் துறை புறம் பின்றே

-நற்றிணை 67.

குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோ வடிகள் ‘உதயகிரி'யில் கதிரவன் தோன்றுவதை,

உதயமால் வரை உச்சித் தோன்றி உலகுவிளங் கவிரொளி மலர்கதிர்பரப்பி

-சிலப்பதிகாரம்: 5 : 5.6

என்று குறிப்பிடுவதோடு, அக் கதிரவன் மறையுமிடமும் மலையென்றே பின்வருமாறு குறிக்கக் காணலாம்.