பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சங்க இலக்கியம்

மல்லல் மாஞால மிருளுட்டி மாமலை மேற்

செல்வன் கதிர்சுருங்கிச் செங்கதிரோன்

சென்றொளிப்ப -சிலப்பதிகாரம் : 19 : 30.32

கதிரவன் தோன்றுமிடமும் கடல்: மறையுமிடமும் கடல் என்று குறிப்பிடுவர், தொண்டர் சீர் பரவவல்ல சேக் கிழார் பெருமான்.

    • 彈 ■■ ■■ ■ 睡 கருங்கடல் மீது தேரின்வந்தெய்தினன் வெய்யவன்

-பெரிய: திருஞான : 209 இலகு பசும்புரவி நெடுந்தேர் இரவிமேல்கடலிற் செலவணையும் பொழுதணையத் திருவதிகைப்

புறத்தணைந்தார் பெரிய: தடுத்தாட்: 82

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்று தம் நூலின் தொடக்கத்தே பாடிய இளங்கோவடிகள் பின்னரும்,

மலர் பொதி யவிழ்ந்த உலகுதொழு மண்டிலம்

வேந்துதலை பனிப்ப வேந்துவாம் செழிபயன்

ஓங்குயர் கூடலூர் துயிலெழுப்ப

இா -சிலப்பதிகாரம்: 14:4.9

என்று உலகோர் கதிரவனைத் தொழுது நின்ற காட்சியினை யும் கதிரவன் மதுரை மாநகர மக்களை வைகறையில் துயிலெழுப்பிய காட்சியினையும் ஒருங்கே புலப்படுத்தி யிருக்கக் காணலாம்.

இருளைப் போக்கி ஒளியைத் தந்து இறப்பை நீக்கி அமிர்தத்தை உலகுக்கு ஈபவன் கதிரவன், கதிரவனின் கதிர்கள் உலகில் மண்டி நிற்கும் இருளைப் போக்கவில்லை எனில் உலகில் எத் தொழிலும் நடவாது. இதனை அகநானூறு,