பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 111

பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு வயங்கு தொழில் தரீஇயர் வலனேர்பு விளங்கி

அகநானூறு : 298

ான்று குறிப்பிடுகின்றது. நாளைப் பகுப்பவன் ஆதலின் பகலவன் என்ற பெயரும், பகற்பொழுதைத் தோற்று விக்கின்ற காரணத்தால் பகல்செய்வோனாகவும் கதிரவன் துலங்குகின்றான்.

பல்கதிர் மண்டிலம் செய் தாற்றி

-நற்றிணை; 69. பகற்செய்யும் செஞ்ஞாயிறு

-மதுரைக் காஞ்சி; 7.

மேலும் கதிரவன் இருளைக் குடித்து ஒளியை உமிழ் கிறான்; அதாவது தீமையைத் தான் ஏற்று நன்மையைப் பிறர்க்கு நல்குகின்றான் என்கின்றது பெரும்பாணாற்றுப் LI (I) L- ,

-பெரும்பாணாற்றுப்படை: 2 - 1.

பயன் கருதாது பாரினைப் பகல் செய்து ஒளியூட்டி நிற்கும் கதிரவனைக் கவிஞர்கள் பலர் உவமை வாயிலாக வருணித்துச் சிறப்புச் சேர்த்துள்ளனர். புலனழுக்கற்ற அந்தணாளராம் பொய்யா நாவிற் கபிலர் கதிரவன் அகன்ற வானவீதியாகிய கடலிலே வலம் வரும் ஒடம் என்று உவமை சொல்லியிருப்பதனைக் காணலாம்.

அகலிரு விசும்பிற்கு ஒடம் போலப் பகலிடை கின்ற பல்கதிர் ஞாயிறு

-குறிஞ்சிப்பாட்டு: 101 - 2.

பகல் முழுதும் கொடிய வெப்பத்தைக் கொடுத்துவிட்டு, மாலைக் காலத்தே வெப்பம் குறைந்து மேற்றிசையில் மலைக் கண் மறையும் கதிரவனைப் பாம்பு உண்ட சந்திரனுக்கு Ф. 6,150) Ш) காட்டியிருக்கிறார் சங்கச் சான்றோர் ஒருவர்.