பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சங்க இலக்கியம்

உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர்பு ஞாயிறு அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்

-அகநானூறு: 114.

கடுமையான கதிர்களைக் கொண்டு கோடைக்காலத்தே கொளுத்தும் வெய்யிலைக் கூட்டும் கதிரவனுக்குக் கொடுங் கோலாட்சி செய்யும் வேந்தன் ஒருவன் இளங்கோவடிகளால் உவமை காட்டப்பட்டுள்ளான்.

கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு

-சிலப்பதிகாரம்: 13, 15 - 16.

கதிரவன் எப்பொழுது மேற்றிசையில் சாய்வான், நாம் நம் மதுரைப் பயணத்தைத் தொடரலாம் என்று நண்பகல் வெப்பத்திற்கு ஆற்றாது ஒதுங்கியிருந்த கோவலன், கண்ணகி, கவுந்தியடிகளுக்குக் கொடுங்கோலாட்சியின் கொடுமை எப்பொழுது மறையும் என்று சமயம் எதிர்நோக்கி யிருந்த குடிகள் உவமை கூறப்பட்டுள்ளார்கள்.

கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றிய தாகத் திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் செப்பியுள்ளார்.

கடலணி திலகம் போலக்

கதிர்திரை முளைத்த தன்றே.

-சீவக சுரமஞ்சரி; 2058. மணிமேகலைக் காப்பியம் தந்த சீத்தலைச் சாத்தனார் கதிரவனை உயிர் வழங்கு பெருநெறிக்கு உவமை காட்டுவார். கதிரவன் இருப்பதை உணரலாம்; ஆனால் அவனைக் கண்னெடுத்து நீண்ட நேரம் கண்களாற் காணல் இயலாது. அது போலவே உயிரின் தன்மையும் அமைந்து கிடக்கிறதாம். உயிரின் காட்சி, செலவு போன்றவற்றை உணர இயலுமே தவிர எடுத்துக்காட்ட வொல்லாது. கதிரவனைக் கண்ணாற்