உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) பத்துப்பாட்டு 1. திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை, முருகு) 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக்காஞ்சி 7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை 10. மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) ஆராய்ச்சிக் குறிப்பு 1. (அ) இவை பத்துள் முதல் நான்கும் முடிவும் ஆற்றுப்படைகள். அவற்றுள் மூன்றும் நான்கும் இருவகைப் பாணர்பற்றியன. (ஆ) எனவே பத்துப்பாட்டுள் செம்பாதி ஆற்றுப் படைகள். (இ) இத் தொகை நூலின் முதலும் முடிவும் ஆற்றுப்படைகள். அவற்றுள் முதலாவது புலவராற்றுப்படை: முடிவானது கூத்த ராற்றுப்படை; இவ்வாறு பெயர் பெற் திருப்பது போற்றத்தக்கது. 2. பத்துப்பாட்டுள் ஐந்தாவது முல்லை நிலம்; ஆறு மருத நிலம்; ஏழு பாலை ஒழுக்கம்; எட்டும் பத்தும் குறிஞ்சி நிலம் ; ஒன்பது நெய்தல் நிலமும் பாலை ஒழுக்கமும். எனவே, பத்துப் பாட்டுள் ஐந்திணையும் அமைந்துள. 8. பத்துப்பாட்டுள் ஐந்தும் ஏழும் எட்டும் ஒன்பதும் அகம்; பிற புறம். 1. எட்டுத்தொகை நற்றிணை (நானூறு) 2. குறுந்தொகை (நானூறு) 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை (கலி, குறுங்கலித்தொகை.) 7. அகநானூறு (நெடுந்தொகை, அகப்பாட்டு.) அகம், 8. புறநானூறு (புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு.) ஆராய்ச்சிக் குறிப்பு 1. (அ) எட்டுன் முதலிரண்டும் ஈற்றிரண்டும் நானூறு நானூறு பாடல்கள் உடையன. (ஆ) எட்டுத்தொகையுள் பரிபாடலும் கலித் தொகையும் நீங்க ஏனைய ஆறும் எண்ணடிப் படையில் தொகுக்கப்பெற்றுப் பெயர் பெற்றவை. 2. எட்டுத்தொகை நூல்கள் பெரும்பாலனவற்றின் எண்ணிக்கையை எண்ணும்போது, பத்திலும் நூறிலும் பழந்தமிழர்க்கு இருந்த பற்றுப் புலனாகும். 3.(அ) பதிற்றுப்பத்தும் புறநானூறும் நீங்கலாக ஏனையவை அகப்பொருள்பற்றியன. அவ் வாறுள்ளும் பரிபாடல் முற்றிலும் அகப் பொருள் பற்றியதா என்பது ஆய்வுக் சூரிய (ஆ) பத்துப்பாட்டைவிட எட்டுத்தொகை யுள்ளே அகப்பொருள் நூல்கள் அதிகமா யிருப்பது அறியத்தக்கது.