3. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்பற்றிய பழம்பாடல்கள் பத்துப்பாட்டு முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை, பெருகுவள மதுரைக் காஞ்சி,-மருவினிய கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப் பாலை, கடாத்தொடும் பத்து. 2. பத்துப்பாட்டும் பாடப்பட்டோரும் முருகாறு செவ்வேள்; பொருநாறு, பாலை கரிகால்; நெடுஞ்செழியன் காஞ்சி;-இருபாணும் நல்லியக் கோடன், இளந்திரையன்; நன்னன்கடாம், கல்வித் தலைவர் கருது: 3. பத்துப்பாட்டும் பாடினேரும் முருகு, நல்வாடையும் கீரன்; முடத்தாமக் கண்ணி பொருந்; மருவு பாண், பாலை உருத்திரங் கண்ணன்; மகிழ்சிறு பாண் புரியுநத் தத்தன்; மருதம்நன் காஞ்சி ; நப்பூதன் முல்லை; வருமெங் கபிலன் குறிஞ்சி; மலைகடாம் கெளசிகனே! 4. பத்துப்பாட்டையும் அதன் உரையையும் காப்பாற்றிய பெரியோன் முருகாறு, பொருநாறு, சிறுபா ணாறு, முல்லை, பெரும் பாணாறு, மதுரைக் காஞ்சி, பரிதாய பொருள்தழுவா நெடுநல் வாடை, பட்டினப்பா லை,குறிஞ்சி, மலைக டாமும், மருவாரும் பொழில்புடைசூழ் களந்தை மூதூர் வருசிவப்ப பூபன்அருள் வேல பூபன், உரையோடும் எழுதினன்ஆ தலினால் அன்னாள் ஓங்குபெருஞ் செல்வம்,இசை யுற்று வாழி! ஆராய்ச்சிக் குறிப்பு 1. இந் நான்கு பாடல்களுள்ளும் உள்ள அடைச்சிறப்பு அறியவே தடித்த எழுத்து. 2. இப் பாடல்களுள் முதல் மூன்றைச் சமாச (பாளி நிலையம் ) பதிப்பிலும், ரான்காவதைப் பெருந்தொகை பதிப்பு (1935-36) பக்கம் 491 லும் காணலாம். 4
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/17
Appearance