உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அகமும் புறமும் பாடிய புலவர்கள் அகனைந்திணையில் 898 பாடல்கள் பாடியுள்ளார்கள். 19. இப்புலவர்கள் பாடிய புறப்பொருட் பாடல்கள் 321. எனவே, புறப்பொருளினும் அகப்பொருள், புலவர் பெருமக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளமை போதரும். ஆக, இவர் பாடிய புறப்பாடல்களைவிட அகப்பாடல்கள் இரண்டரை மடங்கிற்கும் அதிகமாகும். 20. ஐந்திணைகளுள்ளும் குறிஞ்சித்திணை பற்றிய பாடல்கள் மிகுதியாயுள்ளன (298). 21. குறிஞ்சிக்கு அடுத்தபடியாக பாலைத்திணையும் (218), மருதத்திணையும் (206), நெய்தற்றிணையும் (123), முல்லைத்திணையும் (53) அமைந்துள்ளன. 22. முல்லைத்திணைப் பாடல்கள் ஏனைய திணைப்பாடல்களினும் குறைவாகவே உள்ளன (53). 23. பாலைத்திணையும் மருதத்திணையும் ஏறத்தாழச் சமநிலையிலுள்ளன. 24. குறிஞ்சி, பாலை, மருதம்,நெய்தல், முல்லைத் திணைகள் முறையே 6:4: 4:2:1 என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன. 25. ஐந்திணைப் பாடல்களுள் முதனிலையில் ஏற்றம்பெற்றிருப்பவை குறிஞ்சிப் பாடல்கள். எல்லாவற்றினும் இறுதிப்படியில் இருப்பவை முல்லைப் பாடல்கள். 26. ஒரே திணையில் மட்டும் பாடியோர் (30). 1. குறிஞ்சித் திணையில் மட்டும் ஒரேயொரு பாடலைப் பாடியவர் அறுவர் (70,147,166,182, 345,414). வெறிபாடிய காமக்கண்ணியார் மட்டுமே 3 பாடல்களைப் பாடியுள்ளார். 2. முல்லைத் திணையில் ஒவ்வொரு பாடலைப் பாடியவர் மூவர் (12, 139, 443). 3. மருதத் திணையில் தனித்தனியே ஒரு பாடலைப் பாடியவர் மூவர் (138,266,438) 4. நெய்தல் திணையில் மட்டும் ஒரே ஒரு பாடலைத் தந்தவர் மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார். இரண்டு பாடல் பாடியவர் நரிவெரூஉத்தலையாரே. 5. அகமும் புறமும் பாடியோர்களுள் பாலைத் திணையில் மட்டுமே ஒரு பாடலைப் பாடியவர் பதின்மர் (76,82,86,91,166, 107, 211,351, 439, 473). இரு பாடல்கள் மட்டுமே பாடியோர் நால்வர் (69,99,122,352). பெரும்பதுமனார் ஒருவரே 3 பாடல்கள் பாடியுள்ளார். 6. வெறிபாடிய காமக்கண்ணியாரும் பெரும்பதுமனாரும் முறையே குறிஞ்சி, பாலைத் திணைகளில் மட்டுமே மும்மூன்று பாடல்களைப் பாடியுள்ளனர். 27. இரு திணைகளில் மட்டும் பாடியோர் (21). 1. குறிஞ்சி முல்லை இருவர் (83,84). 2. குறிஞ்சி மருதம் ஒருவர் (22). 3. குறிஞ்சி நெய்தல் அறுவர் (7,16,59,256,317,468). 4. குறிஞ்சி பாலை ஐவர் (23,151,231,293,368). 5. முல்லை நெய்தல் ஒருவர் (202) . 6. முல்லை பாலை இருவர் (31,335). 7. மருதம் பாலை இருவர் (315,323). 8. நெய்தல் பாலை இருவர் (43,131). 9. திணைக்கு ஒவ்வொன்றாக இருதிணைகளில் பாடியோர் அறுவர் (23, 84, 202, 317. 323,468) 10. இரு திணைகளிலும் மிகுதியான பாடல்கள் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒருவரே (315). இவர் பாலைத்திணையிற் பாடிய 66 பாடல்களைத் தவிர்த்து மருதத்தில் மட்டும் ஒரு பாடலைத் தந்துள்ளார். மிகுதியும் பாலை பாடிய சிறப்பால் இவர் சிறப்படை மொழி பெறுதலும் விளக்கமாம். 209 27