உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. எட்டுத்தொகை நூல்களுள் இலங்கும் பாகுபாடுகள் I. அகநானூற்றின் பாகுபாடு (அ) அகநானூற்றின் மூவகைப் பாகுபாடு களிற்றியானை நிரை மணிமிடை பவளம் நித்திலக் கோவை (ஆ) அகநானூற்றில் ஐந்திணைப் பாகுபாடும் பாட்டெண்ணும் பாலை முல்லை மருதம் நெய்தல் குறிஞ்சி 1-120 121-320 321-420 1, 3, 5, 7, 9 4 6 10 2, 8 II. தொகை நூல்களின் அமைப்பு முறையை விளக்கும் சில பழம் பாடல்கள் 1. அகநானூற்றில் பாட்டு வைப்புமுறையும் திணைப் பாகுபாடும் அ வியமெல்லாம் வெண்டேர் இயக்கம்; கயமலர்ந்த தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர் நறுமுல்லை நான்காக நாட்டி, வெறிமாண்ட எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து இவர்திரை பத்தா, இயற்பட யாத்தான் தொகையில் நெடியதனைத் தோலாச் செவியான் வகையின் நெடியதனை வைப்பு. ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை; ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை ; அன்றியே ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு கூறாதவை குறிஞ்சிக் கூற்று. பாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல் நாலு நளிமுல்லை ; நாடுங்கால், மேலையோர் தேரும் இரண்டெட்டு, இவை குறிஞ்சி; செந்தமிழின் ஆறு மருதம் அகம். 2. ஐங்குறுநூறும் அவற்றின் ஆசிரியர்களும் மருதம் ஓரம்போகி; நெய்தல்அம் மூவன் கருதும் குறிஞ்சி கபிலன்; கருதிய பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு. 10