1.ஆவூர் மூலங் கிழார் 2. ஐயூர் மூலங்கிழார் 9. நாளாற் பெயர் பெற்றவர் (4) 3. மாமூலனார் 4. மூலங்கீரனார் குறிப்பு: நாளாற் பெயர் பெற்றவரால் மூலத்தின் பெருமை விளங்குகிறது. 10. பாடல் பொருள் முதலியவற்றால் பெயர் பெற்றவர் (16) 1. அந்தி இளங்கீரனார் (அகம் 71) 2. எயிற்றியனார் (* குறுந்.286) 3. கயமனார் (குறுந். 9; அகம் 189) 4. காவன் முல்லைப்பூதனார் (*அகம் 21) 5. நெய்தற் கார்க்கியர் (குறு.55; 212) 6. நெய்தற்றத்தனார் (நற்றிணை 49,130) நோய்பாடியார் (*அகம் 67) 7. 8. பாரதம் பாடிய பெருந்தேவனார் 9. பாலைக் கெளதமனார் (பதிற்றுப்பத்து 21-30) 10. பாலைபாடிய பெருங்கடுங்கோ (கலித்தொகை) 11. மடல் பாடிய மாதங்கீரனார் (குறுந். 182; நற்றிணை 3.) 12. மதுரைக் காஞ்சிப் புலவர் 13. மருதம்பாடிய இளங்கடுங்கோ (அகம் 98; 176; நற்றிணை 50) 14. மருதனிளநாகனார் (கலித்தொகை) 15.மலையனார் (நற்றிணை 33) 16. வெறிபாடிய காமக்கண்ணியார் (அகம்22; 98 நற்றிணை 28) 11. பெற்றாரொடு தொடர்ந்த பெயர்கொண்ட புலவர் (30) 1. அண்டர் மகன் குறுவழுதியார் 2. அஞ்சியத்தை மகள் நாகையார் 3. அழிசி நச்சாத்தனார் 4. ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 5.ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் 6. இடையன் சேந்தன் கொற்றனார் 7. உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் 8. எருமை வெளியனார் மகனார் கடலனார் 9. கருவூர்க்கதப்பிள்ளை சாத்தனார் 10. காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் 11, காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன் 12. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூனார் 13. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சேர கோவனார் 14. குன்றூர் கிழார் மகனார் 15. கோழியூர் கிழார் மகனார் செழியனார் ஆராய்ச்சிக் குறிப்பு: 16. செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் 17. சேந்தங் கண்ணனார் 18.சேந்தம் பூதனார் 19. தமிழக் கூத்தன் நாகன் தேவனார் 20. நாமலார் மகன் இளங்கண்ணன் 21. பாரிமகளிர் 22. பொதும்பில் கிழார் மகனார் 23. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 24. மதுரைக்கடையத்தூர் மகன் வெண்ணாகனார் 25. மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் 26. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 27. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 28. 29. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார் 30. வீரை வெளியன் தித்தனர் 1. இவர்களுள் அஞ்சியத்தை மகள் நாகையார், பாரி மகளிர் என்று கூறப்பெறும் இருவரே பெண்பாற் புலவர். 2. ஏனையோர் ஆண்பாற் புலவர். 3. எந்த ஓர் ஆண்பாற் புலவருக்கும் முன்னால் தாயின் பெயர் வாராமையும் தந்தையின் பெயரே வருகின்றமையும் குறிக்கத் தக்கனவாகும். 4. நாகையார் என்ற பெண்பாற் புலவருக்கு முன்னால் அஞ்சியத்தை என்ற அவர் தாயின் பெயர் காணப் பெறுகிறது. 5. தந்தையின் பெயர் தொடர்ந்த பெண்பாற் புலவர், பாரி மகளிர். 31
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/44
Appearance