உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நற்றிணை) 9. அகப்பொருள் மட்டும் பாடிய பதினைந்து பெண்பாற்புலவர்களுள் ஐவரே நற்றிணையில் இடம் பெறுவர். (அ) வெள்ளி விதியார் இந்நூலுள் மூன் பாடல்களைப் பாடியுள்ளார். (ஆ) கழார்க்கீரனே மற்றியார் இரண்டு பாக்களைப் பாடியுள்ளார். (இ) அஃதில் அஞ்சியார், குறமகள் நழியொகப்பசலையார் இவர்கள் ஒவ்வொரு பிட்டுப்பாடி மூன்று பாடல்ளைத் தமிழுலருக்குத் தந்துள்ளனர். எனவே நற்றிணையில் எட்டுப் பாடல்களைப் பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளனர். அகநனூற்றில் ஒன்பது பாடல்கள் குறுந்தொகையில் இருபத்தேழு பாடல்கள் நற்றிணையில் எட்டுப் பாடல்கள் ஆக, 44 பாடல்களே அகம் மட்டும் பாடிய பெண்பாற்புலவர்க்கு உரிமையானவை. மேலே காணத்தகும் மூன்று தொகை நூல்களுள் 1200 பாக்கள் உள. 1200 பாக்களுள் 44 பாக்களே அகப்பொருள் மட்டும் பாடிய பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளனர். 10. புறப்பொருளுடன் அகப்பொருள் பாடியோர் எழுவர், அவர்களுள், ஒக்கூர் மாசாத்தியார் அகத்தில் இரண்டும் குறுந்தொகையில் ஐந்தும் பாடியுள்ளார். ஔவையார் அகத்தில் மான்கும் குறுந்தொகையில் பதினைந்தும் நற்றிணையில் ஏழும் பாடியுள்ளார். காக்கை பாடினியார் நச்சென்ளையார் ஒன்றும் பூங்கணுத்திரையார் இரண்டும் குறுந்தொகையில் பாடியுள்ளனர். வெறியாடிய காமக்கண்ணியார், நப்பசலையார் இவர்கள் நற்றிணையில் ஒவ்வொரு பாட்டுப் பாடியுள்ளனர். நக்கண்ணையார் நற்றிணையில் இரண்டு பாக்களும் அகத்தில் ஒன்றும் பாடியுள்ளார். வெறிபாடிய காமக்கண்ணியார் அகத்தில் இரண்டு பாக்கள் பாடியுள்ளார். ஆகவே இவை 43 பாக்கள் ஆகும். இம்மூன்று தொகை நூல்களுள் பெண்பாற் புலவர்களால் பாடப்பெற்ற அகப்பொருட் பாடல்கள் 87. இஃது அறிஞர் தம் ஆய்வுக்குரித்து. 11. அகநானூற்றில் ஒக்கூர் மாசாத்தியார் இரண்டு பாக்களைப் பாடியுள்ளார். ஒளவையார் இந்நூலில் நான்கு பாக்களுக்கு உரியவர். நக்கண்ணையார் அகநானூற்றில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். வெறிபாடிய காமக் கண்ணியார் அகநானூற்றில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். அகமும் புறமும் பாடிய புலவர்களாகிய இப்பெண்பாற் புலவர்கள் நால்வரும் அகநானூற்றில் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். அகப்பொருள் மட்டுமே பாடிய புலவர்களாகிய, கழார்க்கீரன் எயிற்றியார், வெள்ளிவீதியார், அஞ்சியத்தை மகள் நாகையார், குமிழிஞாழலார் நப்பசலையார், போந்தைப் பசலையார் ஆகிய ஐவரும் ஒன்பது பாடல்களே அகநானூற்றில் இயற்றியுள்ளனர். ஆகவே, இருவகைப் பெண்பாற் புலவர்களால் (அகப்பொருள் மட்டும் பாடியோர், அகமும் புறமும் பாடியோர்) அகநானூற்றில் பாடப்பட்ட பாடலின் எண்ணிக்கை 18. இந்நூலின் 400 பாக்களில் 18 பாடல்களே பெண்பாற் புலவர்களால் இயற்றப்பட்டவை. 17. நன்னாகையார்; வெள்ளிவீதியார், வெண்பூதியார்; கழார்க்கீரன் எயிற்றியார், நெடும்பல்லியத்தை, ஆதிமந்தி, ஊண்பித்தை, வருமுலையாரித்தி, வெண்மணிப்பூதி ஆகிய இவ்வொன்பது பெண்பாற் புலவர்களும் குறுந்தொகையில் இருபத்தேழு பாடல்களை இயற்றியுள்ளனர். இவ்வொன்பது பெண்பாற் புலவர்களும் அகப்பொருள் மட்டுமே பாடியோராவர். புறப்பொருளுடன் அகப்பொருளும் பாடியோராகிய ஒக்கூர் மாசாத்தியார் குறுந்தொகையில் 5 பாக்களை இயற்றியுள்ளார். ஒளவையார் குறுந்தொகையில் 15 பாக்களை இயற்றியுள்ளார். காக்கைபாடினியார் நச்செள்ளையார் இந்நூலில் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். பூங்கணுத்திரையார் இக்குறுந்தொகையில் 2 பாடல்களை இயற்றியுள்ளார். 52