உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம் மட்டுமே பாடிய பெண்பாற் புலவர்களின் இந்நூற்பாடல் 27. புறமுடன் அகமும் பாடிய பெண்பாற்புலவர்களின் இந்நூற்பாக்கள் 23, ஆகவே, குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களால் பாடப்பெற்ற பாக்களின் எண்ணிக்கை 50. வெள்ளி வீதியார், கழார்க்கீரன் எயிற்றியார், அஞ்சில் அஞ்சியார், குறமகள் குறியெயினி, நப்பசலையார் ஆகிய இப்பெண்பாற்புலவர்களால் நற்றிணையில் பாடப்பெற்ற பாக்களின் எண்ணிக்கை 8. இவர்கள் அகப்பொருள் மட்டும் பாடிய புலவர்களாவர். புறப்பொருளுடன் அகப்பொருள் பாடிய பெண்பாற் புலவர்களில் ஔவையார் நற்றிணையில் ஏழுபாடல்களைப் பாடியுள்ளார். வெறிபாடிய காமக்கண்ணியார் இந்நூலில் பாடியிருப்பது ஒன்றூ. நப்பரலையாரும் ஒரு பாடலே இந்நூலில் பாடியுள்ளார். நக்கண்ணையார் இந்நூலில் இரண்டு பாக்களைப் பாடியுள்ளார். எனவே அகமுடன் புறம் பாடியோர் நற்றிணையில் பாடிய பாக்களின் எண்ணிக்கை. 11. பெண்பாற் புலவர்களால் நற்றிணையில் பாடப்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 18. எனவே பெண்பாற்புலவர்களால் பாடப்பட்ட அகப்பொருட்பாக்கள் 87. ஆராய்ச்சிக் குறிப்பு : புறப்பொருள் பாடிய பெண்பாற் புலவர்கள் 1.புறப்பொருள் மட்டுமே பாடிய பெண்பாற்புலவர் எண்மர். 2. அகப்பொருளுடன் புறப்பொருள் பாடிய பெண்பாற் புலவர் எழுவர். ஆகவே, பதினைந்து பேர்கள் புறப்பொருள் பாடிய பெண்பாற் புலவர் ஆவர். 3. புறப்பொருள் மட்டும் பாடிய புலவர்களில் மாற்பித்தியார் இரண்டு பாக்கள் (251, 252) புறநானூற்றில் பாடியுள்ளார். காவற்பெண்டு ஒரு பாடல் (86) பாடியுள்ளார். புறநானூற்றில் 157ஆம் பாடலைக் குறமகள் இளவெயினியும் 250ஆம் பாடலைத் தாயங்கண்ணியாரும் 112ஆம் பாடலைப் பாரிமகளிரும் 246ஆம் பாடலைப் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டும் 11ஆம் பாடலைப் பேய்மகள் இளவெயினியும் 66ஆம் பாடலை வெண்ணிக்குயத்தியாரும் பாடியுள்ளனர். ஆக, புறப்பொருள் மட்டுமே பாடிய பெண்பாற் புலவர்களின் பாக்கள் ஒன்பது. 4. புறப்பொருளும் அகப்பொருளும் பாடிய புலவர்களில் ஒக்கூர் மாசாத்தியார் புறநானூற்றில் ஒரு பாடல் (279) பாடியுள்ளார். 5. ஒளவையார் புறநானூற்றில் 33 பாக்களுக்கு உரியவர். 6. காக்கை பாடினியார் நச்செள்ளையார் புறநானூற்றில் ஒன்றும் (278) பதிற்றுப்பத்தில் பத்தும் (51-60) பாடியுள்ளார். 7. வெறிபாடிய காமக்கண்ணியார் புறநானூற்றில் இரண்டு பாக்கள் (2:1,302) பாடியுள்ளார். 8. நக்கண்ணையார் புறநானூற்றில் மூன்று பாக்கள் (83,84,85) பாடியுள்ளார். 9. பூங்கணுத்திரையார் புறநானூற்றில் ஒரு பாடலைப் (277) பாடியுள்ளார். 10. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றில் ஏழுபாக்கள் (37, 39, 126, 1:4, 226, 280,180) பாடியுள்ளார். 11. ஆகவே, 15 பெண்பாற்புலவர்கள் புறநானூற்றில் 57 பாடல்களும் பதிற்றுப்பத்தில் பத்துப் பாக்களும் பாடியுள்ளனர். 12. ஆக, மொத்தம் 67 புறப்பொருட்பாக்கள் பெண்பாற்புலவர்களால் இயற்றப்பெற்றவை. 13. அகமும் புறமும் பாடிய பெண்பாற் புலவர்களில் புறநானூற்றில் மிக அதிகமாகப் பாடலை இயற்றியவர் ஒளவையார். இவர் இயற்றிய பாக்கள் இந்நூலில் 33. 53