+ நன்றியுரை என் நெடுநாளைய அவர். சென்னைப் பல்கலைக் சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள், கழகத்தில் ஆசிரியனாய்ச் சேர்ந்தபோதும் புதுப்புதுத் துறைகளில் மாணவனாய்ப் புகுந்தேன். சிறப்பாக மானிடவியலும் அரசியல்- ஆட்சியியல் கலைகளும் கற்றேன். கல்விப் பெருங்கோயிலாய் விளங்கும் இப் பல்கலைக்கழகத்தின் நூலகமும் சொற்பொழிவு அரங்கங்களும் பழந்தமிழைப் புதிய கண்கொண்டு பார்த்தலே இன்றைய இன்றியமையாத் தேவை- கடமை - என்பதை எனக்கு நாளும் உணர்த்தி வந்தன. இதன் பயனாகச் சங்க இலக்கிய வைரத்தை ஆராய்ச்சி அட்டவணைகள் என்னும் பட்டை தீட்டிப் பார்க்க அவாவினேன். ஒரு சிறு விளைவே இந் நூல். இப் புதுவகை முதல்நூல் உருவாகத் துணைபுரிந்த சங்க இலக்கியப் பதிப்புகள் - ஆராய்ச்சி நூல்கள் அனைத்தின் ஆசிரியர்கட்கும் என் நன்றி கலந்த வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாகப் பழந்தமிழ் - சங்கத் தமிழ் நூலுணர்வை டாக்டர் உ.வே சாமிநாத ஐயர் அவர்கட்கு உண்டுபண்ணிய சேலம் இராமசாமி முதலியார் அவர்களையும் [பார்க்க - ௩. சஞ்சீவி: இருபெருந் தலைவர் (1958)] சங்க இலக்கிய - கலித்தொகையின் முதற் பதிப்பாசிரியர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களையும் (சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி) இதுபோது நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கல் நம் இன்றியமையாக் கடமையாகும். சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள் வெறும் ஆராய்ச்சி அட்டவணைகள் - அறிவிப்பு அட்டவணைகள் அல்ல. ஆராய்ச்சிப் பண்பால் பிறந்து ஆராய்ச்சிப் பயனால் சிறந்து விளங்க விழைவன. இவ் வுண்மையை ஒவ்வோர் அட்டவணையின் அடியில் உள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளும் அறிவிக்கும். எவ்வளவு வகை தொகை செய்யப்பட்டதாயினும் வெறும் உண்மைகள் அல்லது செய்திகள் உண்மைகள் அல்லது செய்திகள் என்ற நிலையில் நிற்கும்போது அது முழு ஆராய்ச்சி ஆகாது. பற்றிய உயர் விளக்கங்களே உயர் ஆராய்ச்சி ஆகும். இனியன. ஆனால் ஆராய்ச்சி அட்டவணைகள் பார்ப்பதற்கும் பயன்படுத்தற்கும் எளியன ; ஆக்குதற்கும் அளித்தற்கும் அரியன. செய்முறைப் பட்டறிவே இவ்வுண்மையை மெய்ப்பிக்கும். சிறப்பாக இத்தகு ஆராய்ச்சி அட்டவணைகளை அமைப்பதற்கும் அச்சிடுதற்கும் கொள்ளும் காலம் கொள்ளை. சங்க இலக்கியம்பற்றி ஓர் ஆயத்த அறிவிப்பு ஏடாக (Ready - reference Book) இந் நூல் சிறந்த முறையில் உருவாகப் பெருந்துணை புரிந்த பெருமாட்டி என் மதிப்பிற்குரிய வாழ்க்கைத் துணைவியார் வட சென்னை மகளிர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியை திருமதி. கிருஷ்ணா சஞ்சீவி, எம்.ஏ., எல்.டி. அவர்கள். நாங்களிருவரும் பாடுபட்டு உருவாக்கிய இந் நூலில் செப்பங்கள் செய்துத விய புலவர்கள் திரு. மு. சண்முகம் பிள்ளை, திரு. ஆனை, ஈரசிங்கப்பெருமாள் ஆகியோருக்கும், திரு.அ.நாகலிங்கம்,எம்.ஏ,திரு.வ.ஜெயதேவன்,எம்.ஏ., சான்றிதழ் மொழியியல், அவர்கட்கும் சுருக்கெழுத்தர் திரு. மா. பத்மநாபன் அவர்கட்கு என் உளங்கனிந்த நன்றி என்றும் உரிய து. இந் நூலை அச்சிடுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்குப் பரிவுரை புரிந்த என் ஆசிரியப் பெருந்தகையும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும் இந்நாள் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரும் ஆகிய என் அறிவுத்தந்தை பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கட்கு எழுமையும் நன்றியுடையேன். இந் நூல் அச்சாவதில் கண்ணுங்கருத்துமாய் இருந்த கல்விநெறிக் காவலர் - சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் - தாமரைச் செல்வர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களுக்கு யான் எவ்வாறு நன்றிசெலுத்த வல்லேன்? சங்க இலக்கியச் 'சான்றோர் சென்ற நெறி'யில் செல்லும் அச் வணங்குதல் அன்றி வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது!" செல்லாச் செல்வரை இப்புதுவகை முதல்நூல் நன்முறையில் அச்சாக என்னுடன் பொறுமையுடன் ஒத்துழைத்த இரத்தினம் அச்சகத்தார்க்கு என் உளங்கனிந்த பாராட்டு என்றும் உரியது. சங்கப்பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் இந்த ஆராய்ச்சி அட்டவணைகள் நூலையும் உடன் வைத்துப் பார்த்துக் குற்றங் குறைகளைக் குறித்து அனுப்பல் நற்றம் நிறைய நல்வழி ஆகும். அவ்வகையில் இந் நூல் இன்னும் ஏற்றம் பெற ஏற்பன கூறுவார்க்கு எஞ்ஞான்றும் நன்றியுடையேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பணி ஒன்றையே வாழ்நாட் பணியாகக் கொண் டிருக்கும் என் முயற்சிகள் சிறந்தோங்கத் தமிழ்த்தாய் தண்ணருள் புரிவாளாக! 14-1-73 தமிழர் திருநாள் } ந.சஞ்சீவி
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/8
Appearance