பக்கம்:சங்க கால மகளிர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

எதிர் நில்லாதே என்று தலைவி கூறும்பொழுது, 'என் தந்தை பெயரைக் கொண்டவனை நான் அணைத்துக் கொள்வேன்? உனக்கென்ன?' என்று கூறிவிட்டுக் கன்று இருக்குமிடம் செல்லும் பசுப் போல மகனிருக்குமிடம் பாய்ந்து செல்வான் தலைவன்".[1]

இவ்வாறு மருதக்கலியில் ஒரு காட்சி இடம் பெறுகின்றது.

புதியதாகத் திருமணம் செய்து கொள்ளச் செல்லும் தலைவனைத் தடுத்து நிறுத்திய குழந்தையொன்றைப் பற்றிய செய்தி அகப்படாலொன்றில் பேசப்படுகின்றது. [2]

எனவே இத்தகு மகனைப் பெற்ற மகளிர்தம் சிறப்புச் சொல்லவும் வேண்டுங்கொல்?

மகளிர் கூத்தும் விளையாட்டும்

'மகளிர் துணங்கை நாளும் வந்தன்'[3] என்று கூறி மகளிர் தம்முன் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தை நிகழ்த்துவது பண்டைய வழக்கமாகும்.[4] அது பொழுது அவர்கள் விரும்பும் ஆடவர் அவர்க்கு முதற்கை கொடுத்தல் மரபு.[5]

திருமணத்திற்கு முன் தோழியரோடும், திருமணத்திற்குப்பின் தம் தலைவியரோடும் புனலாடச் (swimming) செல்வது என்பது வழக்கம்.[6]


  1. கலித்தொகை: 86.
  2. அகநானூறு: 66.
  3. "336:16.
  4. குறுந்தொகை: 31; 2
  5. கலி: 73: 16-7: புறநானூறு:24: 8-9.
  6. பெரும்பாணாற்றுப்படை: 387-8