பக்கம்:சங்க கால மகளிர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 இவ்வாறு சுதந்திரமாக மகளிர் இளம் வயதில் நீராடச் சென்ற நிகழ்ச்சி அவர்தம் சுதந்திர நிலையினை விளக்கும் என்பர்.2

நல்ல கணவனைப் பெற வேண்டித் தைத்திங்களில் காலையெழுந்து நீராடி நோன்பு நோற்பது மகளிர் வழக்கமாகும். ? ?

மகளிர் தம் கணவரோடும் குழந்தையோடும் கை கோத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்கள் என்பது மதுரைக்காஞ்சியில் நாம் காணும் குறிப்பு. சங்க கால மகளிர் பொது விடங்களில் தாராளமாகப் (fneely) பழகிய பான்மையினை (நிலையினை) உணர்த்தும்.'" இது போன்றே திருமாலிருஞ்சோலை மலைக்குக் கணவனும் மனைவியும் பெற்றோரும் குழந்தைகளும் உறவினரும் ஒன்றுகூடித் திருமாலை லழிபடச் செல்லும் செயலும் பரிபாடலிற் கூறப்பெறும்.'

பெண் பெற்ற சிறப்பு

குன்றுறையும் தெய்வத்தை வணங்கிக் குன்றக் குறவன் பெண் மகனைப் பெற்ற செய்தியும் பிசிராந்தையார் தமக்கு முதுமையிலும் நரை தோன்றாததற்குக் காரணம், தமக்கு அமைந்த சிறப்பிற்குரிய


258. We may infer that women of the period had a free social life, and enjoyed themselves sporting in the river” J. V. Chelliah-Pattupattu Translation, p.46

259. கலித்தொகை: 59 260. மதுரைக்காஞ்சி: 460-467. 2 61. பரிபாடல்:15: 46-48.

262. ஐங்குறுநூறு: 257.