பக்கம்:சங்க கால மகளிர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

 காதலியாகவும் அறத்துப் பாலில் வாழ்க்கைத் துணைவியாகவும் இருக்கும் பெண், பொருட்பாலில் கணவன் ஆற்றும் பொதுக்கடமைகளுக்கு இடையூறாக நிற்காமல் உதவி அளிப்பவளாக இருக்க வேண்டும்: பொருட்பாலில் பொது வாழ்விற்கு இடையூறாக நிற்கும்போதுதான் கடிந்து கூறுகின்றார். அப்போதும் பெண்ணைக் கடிந்து கூறவில்லை: பெண்ணைத் திருத்த முடியாமல் அவள் விரும்பிய வழியில் நடக்கும் ஆணையே கடிகின்றார்: பொதுக் கடமைகளுக்கு இ ைட யூ றா கும் காரணம் பற்றியே கடிகின்றார்; திருவள்ளுவர் ஆணிற்கும் பெண்ணிற்கும் ஒத்த உரிமை நல்கும் சான்றோர் ஆவர்: "ஆணுக்குப் பெண் அடங்கும் பெண்ணடிமைத் தன்மை, குடும்ப முன்னேற்றத்தைக் குலைக்க வல்லது அது போலவே பெண்ணுக்கு ஆண் அடங்கி நடக்கும் ஆணடிமைத் தன்மையும் பொதுவாழ்க்கையைக் கெடுக்க வல்லது முதலான விளக்கங்களை டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் இப்பொருள் பற்றித் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.289

பெண் நிலை தாழ்ச்சியுறல்

எனவே, சங்ககால இறுதியில் கடமையையே உயிராக எண்ணிய கணவனும், கணவனையே உயிராக எண்ணிய மனைவியும் ஒரு சிறிது அந்நிலையினின்று நெகிழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் காணப்பெறும் சில குறிப்புகள் இவ்வாறு நம்மை நினைக்கத் தூண்டுகின்றன.

ஏனெனில் இன்னா நாற்பதில், பெரிய மென்மை வாய்ந்த மூங்கிலை யொத்த தோள்களையும், தளிரை யொத்த மென்மையினையுமுடைய மகளிரை நஞ்சென்று


299. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்:

ப. 2.0 6.2 0.