பக்கம்:சங்க கால மகளிர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

 நினைத்தல் இனிது’ என்ற கருத்து இடம்பெற்றுவிட்டது.300

கற்புடைய மனைவியைக் கோலாற் புடைத்தலைப் பற்றிய செய்தி கூறப்படுகின்றது .301

இக்காலத்தே மகளிற் பண்பும் சரிவு கண்டுவிட்டது என ஒரளவு அறிய முடிகின்றது.

காரணம், கணவனை எதிர்த்து நிற்கும் மனைவி,302 பிறறோடு வழக்குத் தொடுத்து மன்றம் ஏறும் பெண், 303 திரிகடுகப் பாடல்களில் இடம் பெறுவதோடு, மனைவிக்குப் பயந்து வாழும் எருது போன்ற ஆணும் இடம் பெறக் காணலாம். 304

இந்தப் பெண்ணின் வீழ்ச்சிக்குத் தென்னிந்தியாவில் கி. பி ஐந்து, ஏழாம் நூற்றாண்டுகளில் சமண, பெளத்த


300. இன்னா நாற்பது: 3 7-3-4.

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை விடமென் றுணர்தல் இனிது 30 1. திரிகடுகம்: 3. 'காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும்' 302. திரிகடுகம்: 6 7.

"எதிர்நிற்கும் பெண்ணும்' 30.3. திரிகடுகம்: 71.

‘. . . . . . . . . பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும்' 304. திரிகடுகம்: 78.

H. H. H. H. H. H. H. ...கொண்டிருந்தும் இல்லஞ்சி வாழும் எருது.