பக்கம்:சங்க கால மகளிர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சமயங்களின் வளர்ச்சியே காரணம் ஆகுமென்றும், மோட்சம் பெறுவதற்கு மகளிர் தடையாவர் என இச்சமய குரவர்கள் நினைத்தமையே பெண், சமுதாயத்தில் பின்னாளில் தாழ்ச்சியாக மதிக்கப்பெற்றதற்குக் காரணம் என்பர். 198

இந்தச் சான்றுகள் கொண்டும் சங்ககாலத்தில் பெண்மை நலமும் உரிமைச் சிறப்பும் நன்கு போற்றப்பட்டன என்பதனையும். பின்னாளில் அந்நிலை சற்று வழுவியது என்பதனையும் நன்கு அறியலாம்.

பெண்ணால்ஆண்பெற்றபெருமிதம்சங்க கால இலக்கியங்களில் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி இடம் பெறுவதனையான் முடிவுரை கூறப்புகுமுன் குறிப்பிட வேண்டுவது அவசியம். அதாவது ஆண்மகன் ஒருவனைக் குறிப்பிட வரும் புலவர்கள், இவன் இன்ன நல்ல பெண்ணின் கணவன் என்று பாராட்டப்படும் தனிச்சிறப்பினைக் காணலாம்

பதிற்றுப்பத்தில் மன்னனை வாழ்த்தும்பொழுது 'நல்லோள் கணவன்' என்றும், புரையோள் கணவ'391 என்றும், சேயிழை கணவ ச98 என்றும், ஒண்டொடி கணவ'*' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தலைவியிடத்தில் தலைவன் ஒருவன் கொண்ட காதலை நிறைவேற்றித் தரத் தோழி ஒருத்தி மறுக்கிறாள். அது


3.05. Dr. K. K. Pillai, The Social History of the Tamils

part I, pp. 390-397.

306. பதிற்றுப்பத்து: 6: 1: 3-4.

3 O 7. | H. : 7: 10: 14-16. 3.08. H. H. : 8: 28, 26-36. 3 09. I : 9: I 0: 46- 50.