பக்கம்:சங்க கால மகளிர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


மனைவியர் இளைய மனிதர்க்கு இளம்வயதில் தலைவியராகவும், நடுத்தர வயதில் துணைவர்களாகவும், முதிய வயதில் செவிலியராகவும் திகழ்கின்றனர்.

- பிரான்சிஸ் பேகன்

கடவுள் எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்து ஒளிர முடியாது; எனவே தனக்கு மாற்றாகத் தாயரைப் படைத்தான். - ஓர் யூதப் பழமொழி

குழந்தைகளின் உதடுகளிலும் உள்ளத்திலும் தாய் மார்கள் கடவுளாகத் திகழ்கிறார்கள். - தாக்கரே

குழந்தையின் எதிர்காலம் தாய்மார்களின் கைவினை யாக அமைகின்றது. - நெப்போலியன்

தாய்மார்கள் எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ் வாறே மனிதர்கள் அமைகிறார்கள்.

- எமர்சன்

மனைக்குவிளக் காகிய வாணுதல்

-புறநானூறு:314:1

மனைக்கு விளக்கம் மடவாள்

-நான்மணிக்கடிகை: 105:1

ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.

--பாலைக்கலி: 18:9-11

இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே

-அகநானூறு:12:5

மறுவில் கற்பில் வாணுதல் கணவன்

- திருமுருகாற்றுப்படை:6