பக்கம்:சங்க கால மகளிர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

பழைய பெருநகரிலே, இளமை வேகத்தால் வெளியே பந்தை எறிந்துவிட்டுப் பந்தின் பின்னல் ஓடி வந்தவளே!”[1] என்று தலைமகன் ஒருவன் தலைமகளைக் கண்டு பேசுவதாக அமைந்துள்ள கலித்தொகைப் பாடற்பகுதி மகளிர் உடல் வனப்பினைத் தெள்ளிதின் புலப்படுத்தும்.

இவ்வுடல் வனப்பு தலைமகனின் உள்ளத்தில் வேட்கையை விளைவிக்கும். எனவே தலைமகனுக்கும் தலைமகளுக்கும் ஒத்திருக்க வேண்டிய பண்புகளாகப் பத்துப் பண்புகளைத் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார்:

பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென

முறையுறக் கிளங்த ஒப்பினது வகையே.[2]

ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த வயதும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் எனப் பத்து வகையில் தலைமகள் தலைமகனோடு ஒத்திருக்க வேண்டும் என்று கூறுவர் தொல்காப்பியனார். இவண் ‘உருவு நிறுத்த காம வாயில்’ என்பது, பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு என்றவாறு என்று இளம்பூரணர் குறிப்பிடுவர். எனவே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உடல் வனப்பு, பருவ வயதில் நிற்கும் தலைவன் தலைவியர்க்கு இடையில் காதல் அரும்ப வைக்கும் கருவியாக அமைகின்றது.

மேலும்,

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப?[3]

  1. குறிஞ்சிக்கலி: 21:1-7
  2. தொல்காப்பியம்: மெய்ப்பாட்டியல்: 25
  3. தொல்காப்பியம்: களவியல்: 2